ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பிற்கான பாதி கனவுகள் அடைக்கப்பட்ட நிலையில், கடைசி வாய்ப்பாக 3 போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தமிழ் தலைவாஸ், யு மும்பா, தெலுகு டைட்டன்ஸ், யுபி யோத்தாஸ், பெங்களூரு புள்ஸ், தபாங் டெல்லி, பாட்னா பைரேட்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் என்று 12 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.
ஆகாஷ் தீப் யார்? இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
இதில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியானது விளையாடிய 19 போட்டிகளில் 13 வெற்றி பெற்று 77 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்று அரையிறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இதே போன்று புனேரி பல்தான் அணியானது 18 போட்டிகளில் விளையாடி 13 வெற்றியுடன் 76 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை எட்டி அரையிறுதி வாய்ப்பை நேரடியாக பெற்று விட்டது. இதே போன்று தபாங் டெல்லி, பாட்னா பைரேட்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீல்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த 4 அணிகளும் எலிமினேட்டர் சுற்றில் விளையாட இருக்கின்றன. ஆனால், அதற்கு முன்னதாக, பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புள்ஸ், தமிழ் தலைவாஸ் ஆகிய 3 அணிகளுக்கு கடைசியாக பிளே வாய்ப்பை எட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
Lucknow Super Giants, Shamar Joseph: ஷமார் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு தட்டி தூக்கிய லக்னோ!
யு மும்பா, யுபி யோத்தாஸ் மற்றும் தெலுகு டைட்டன்ஸ் ஆகிய 3 அணிகளும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தான் 19 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கும் தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் 3 போட்டிகள் எஞ்சிய நிலையில், இந்த 3 போட்டியிலும் தமிழ் தலைவாஸ் கண்டிப்பாக வெற்றி பெற்றால் 60 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும். ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு அவ்வளவு தான்.
13 வருட டெஸ்ட் வாழ்க்கையில் முதல் முறையாக முழு தொடரையும் இழந்த விராட் கோலி!
தமிழ் தலைவாஸ் 3 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 5ஆவது மற்றும் 6ஆவது இடங்களில் இருக்கும் குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் ஆகிய 2 அணிகளில் ஏதாவது ஒரு அணி எஞ்சிய போட்டிகளில் எல்லாம் தோல்வி அடைய வேண்டும். குஜராத் அணிக்கு 3 போட்டியும், ஹரியானா அணிக்கு 4 போட்டியும் உள்ளன.
அதோடு, புள்ளிப்பட்டியலில் 7ஆவது மற்றும் 8ஆவது இடங்களில் உள்ள பெங்கால் வாரியர்ஸ் மற்றும் பெங்களூரு புள்ஸ் ஆகிய 2 அணிகளும் எஞ்சிய 3 போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும். அப்படி தோல்வி அடைந்தால் மட்டுமே தமிழ் தலைவாஸ் அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.