ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை: பயிற்சி போட்டிகளில் அர்ஜெண்டினா, ஜெர்மனி அணிகள் வெற்றி

By karthikeyan V  |  First Published Nov 17, 2022, 3:27 PM IST

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் வரும் 20ம் தேதி கத்தாரில் தொடங்கும் நிலையில், பயிற்சி போட்டிகளில் யு.ஏ.இ அணியை வீழ்த்தி அர்ஜெண்டினாவும், ஓமனை வீழ்த்தி ஜெர்மனியும் வெற்றி பெற்றன.
 


ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் வரும் 20ம் தேதி முதல் கத்தாரில் தொடங்குகிறது. உலகின் மிகப்பெரும் விளையாட்டு திருவிழா கால்பந்து உலக கோப்பை. சர்வதேச அளவில் கிரிக்கெட்டை விட அதிகளவிலான ரசிகர்களை பெற்ற விளையாட்டு கால்பந்து தான். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடருக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். கால்பந்து அணிகள் கத்தாருக்கு வந்து பயிற்சி போட்டிகளில் ஆட தொடங்கிவிட்டன. கத்தாரில் கால்பந்து உலக கோப்பை திருவிழா களைகட்ட தொடங்கிவிட்டது.

32 அணிகளும் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவில் 4 அணிகள் என பிரித்து அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

Forbes 2022: அதிகம் சம்பாதிக்கும் டாப் 10 கால்பந்து வீரர்கள்! மெஸ்ஸி, ரொனால்டோவை முந்தி முதலிடம் பிடித்த வீரர்

குரூப் ஏ - கத்தார், ஈகுவடார், செனெகல், நெதர்லாந்து
குரூப் பி - இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்
குரூப் சி - அர்ஜெண்டினா, சௌதி அரேபியா, போலந்து, மெக்ஸிகோ
குரூப் டி - ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா
குரூப் இ - ஸ்பெயின், கோஸ்டாரிக்கா, ஜெர்மனி, ஜப்பான்
குரூப் எஃப் - கனடா, பெல்ஜியம், மொராக்கோ, குரோஷியா
குரூப் ஜி - பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேம்ரூன்
குரூப் ஹெச் - போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா

வரும் 20ம் தேதி முதல் ரவுண்ட் ஆஃப் 32 சுற்று தொடங்கும் நிலையில், அதற்கு முன் பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி பயிற்சி போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடி கோல் மழை பொழிந்த அர்ஜெண்டினா அணி, அமீரக அணியை ஒரு கோல் கூட அடிக்க அனுமதிக்கவில்லை. கடைசியில் 5-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி அபார வெற்றி பெற்றது. அர்ஜெண்டினா அணியில் அதிகபட்சமாக ஏஞ்சல் டி மரியா 2 கோல்கள் அடித்தார். லியோனல் மெஸ்ஸி, ஜூலியன் மற்றும் ஜோக்வின் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

ஐபிஎல் 2023: 13 வீரர்களை மொத்தமா கழட்டிவிட்ட மும்பை இந்தியன்ஸ்..!

ஜெர்மனியும் ஓமனும் மோதிய மற்றொரு பயிற்சி போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஜெர்மனி அணிக்கு கடும் டஃப் கொடுத்தது ஓமன் அணி. முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. 2வது பாதியில் ஜெர்மனி அணி ஒரு கோல் மட்டும் அடித்து வெற்றி பெற்றது.
 

click me!