Forbes 2022: அதிகம் சம்பாதிக்கும் டாப் 10 கால்பந்து வீரர்கள்! மெஸ்ஸி, ரொனால்டோவை முந்தி முதலிடம் பிடித்த வீரர்

Published : Nov 17, 2022, 02:52 PM ISTUpdated : Nov 18, 2022, 01:06 PM IST
Forbes 2022: அதிகம் சம்பாதிக்கும் டாப் 10 கால்பந்து வீரர்கள்! மெஸ்ஸி, ரொனால்டோவை முந்தி முதலிடம் பிடித்த வீரர்

சுருக்கம்

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில், இந்த ஆண்டு கால்பந்தில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 10 வீரர்கள் பட்டியலில் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருபெரும் ஜாம்பவான்களை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் 23 வயது இளம் வீரர் கைலியன் எம்பாப்பே.  

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் வரும் 20ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போது பயிற்சி போட்டிகள் நடத்தப்படுகின்றன. உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இந்த உலக கோப்பை தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட அதிகம் சம்பாதிக்கும் டாப் 10 கால்பந்து வீரர்களை பட்டியலை வெளியிட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்கான இந்த பட்டியலில் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவரையும் 23 வயது இளம் கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

ஐபிஎல் 2023: 13 வீரர்களை மொத்தமா கழட்டிவிட்ட மும்பை இந்தியன்ஸ்..!

இந்த பட்டியலில் கடந்த சில வருடங்களாக மெஸ்ஸியும் ரொனால்டோவுமே மாறி மாறி முதலிடத்தில் இருந்துவந்தனர். சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரர்களான இவர்கள் இருவரும் தான் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துவந்தனர். இதை வைத்து இவர்களது ரசிகர்களும் சமூகவலைதளங்களில் அடித்துக்கொண்டனர். இவர்கள் இருவருமே திறமையளவில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்பதால், ஃபோர்ப்ஸ் பட்டியலில் பெறும் இடத்தை பொறுத்தே யார் பெரியவர் என்ற விவாதம் நடந்துவந்தது.

இந்நிலையில், இப்போது 23 வயது இளம் வீரர் இவர்கள் இருவரையும் பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் வீரரான கைலியன் எம்பாப்பேவின் 2022ம் ஆண்டு வருமானம் $128 மில்லியன் என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. $110 மில்லியனுடன் மெஸ்ஸி 2ம் இடத்திலும், $100 மில்லியனுடன் ரொனால்டோ 3ம் இடத்திலும் உள்ளனர்.

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட2022ம் ஆண்டில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 10 கால்பந்து வீரர்கள்:

1. கைலியன் எம்பாப்பே (பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்) - $128 மில்லியன்

2. லியோனல் மெஸ்ஸி (பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்) - $110 மில்லியன்

3. கிறிஸ்டியானோ ரொனால்டோ (மான்செஸ்டர் யுனைடெட்) - $100 மில்லியன்

4. நெய்மர் (பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்) - $87 மில்லியன்

5. முகமது சலா (லிவர்பூல்) - $53 மில்லியன்

6. எர்லிங் ஹாலந்த் (மான்செஸ்டர் சிட்டி) - $39 மில்லியன்

7. ராபர்ட் லிவாண்டோஸ்கி (பார்சிலோனா) - $35 மில்லியன்

ஐபிஎல் 2023: சிஎஸ்கே விடுவித்த வீரர்கள், கையிருப்பில் இருக்கும் தொகை..! முழு விவரம்

8. ஈடன் ஹசார்ட் (ரியல் மாட்ரிட்) - $31 மில்லியன்

9. ஆண்ட்ரெஸ் இனியெஸ்டா (விசெல் கோப்) - $25 மில்லியன்

10. கெவின் டி ப்ருய்ன் (மான்செஸ்டர் சிட்டி) - $29 மில்லியன்
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!