புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்த பெங்களூரு புல்ஸ்

Published : Nov 15, 2022, 10:02 PM IST
புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்த பெங்களூரு புல்ஸ்

சுருக்கம்

புரோ கபடி லீக் தொடரின் இன்றைய போட்டிகளில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி பெங்களூரு புல்ஸும், யு மும்பா அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸும் வெற்றி பெற்றன.  

புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று நடந்த முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸும் யு மும்பாவும் மோதின. புனேவில் நடந்த இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ஜெய்ப்பூர் அணி 32-22 என யு மும்பாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

புள்ளி பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் 2 சிறந்த அணிகளான ஜெய்ப்பூர் - யு மும்பா இடையேயான போட்டி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த போட்டியில் யு மும்பா மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2023: ஐபிஎல் அணிகள் விடுவித்த, தக்கவைத்த வீரர்கள்.. கையிருப்பு தொகை விவரம்

அடுத்த போட்டியில் பெங்களூரு புல்ஸும் தெலுங்கு டைட்டன்ஸும் மோதின. இந்த போட்டியின் ஆரம்பத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தினாலும், அதன்பின்னர் பெங்களூரு புல்ஸ் அணி தொடர்ச்சியாக புள்ளிகளை பெற்று 49-38 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2023: 11 வீரர்களை மட்டும் தக்கவைத்து, 16 வீரர்களை கொத்தா கழட்டிவிட்ட கேகேஆர்.! என்னதான்டா உங்க திட்டம்?

ஐபிஎல் 2023: 13 வீரர்களை மொத்தமா கழட்டிவிட்ட மும்பை இந்தியன்ஸ்..!

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது பெங்களூரு புல்ஸ் அணி. புனேரி பல்தான் அணி 2ம் இடத்திலும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 3ம் இடத்திலும், யு மும்பா அணி 4ம் இடத்திலும் உள்ளன. 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!