
ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை இன்று சமர்ப்பித்தது.
2 முறை சாம்பியனான கேகேஆர் அணி, கடந்த சீசனுக்கான மெகா ஏலத்தில் ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுத்து கேப்டனாக்கியது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கடந்த சீசனில் கட்டமைக்கப்பட்ட கேகேஆர் அணி சோபிக்காததால் அந்த அணி மீது அணி நிர்வாகத்திற்கு திருப்தியில்லை.
ஐபிஎல் 2023: 13 வீரர்களை மொத்தமா கழட்டிவிட்ட மும்பை இந்தியன்ஸ்..!
ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலத்திற்கு முன் 16 வீரர்களை விடுவித்துள்ளது கேகேஆர் அணி. அதற்கு முன்பாக மற்ற அணிகளிடமிருந்து டிரேடிங் முறையில் 3 வீரர்களை வாங்கியது கேகேஆர் அணி. டெல்லி கேபிடள்ஸ் அணியிடமிருந்து ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூரை (ரூ.10.75 கோடி) வாங்கியது கேகேஆர் அணி. குஜராத் டைட்டன்ஸிடமிருந்து நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் லாக்கி ஃபெர்குசன் (ரூ.10 கோடி) மற்றும் ஆஃப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இருவரையும் வாங்கியது கேகேஆர் அணி.
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் பாட் கம்மின்ஸ் அடுத்த ஐபிஎல் சீசனில் ஆடப்போவதில்லை என்று அறிவித்திருந்த நிலையில், அவரை விடுவித்துள்ளது கேகேஆர் அணி. சாம் பில்லிங்ஸும் அதேமாதிரி விலகிவிட்டார். அமான் கான் என்ற வீரரை டெல்லி கேபிடள்ஸுக்கு கொடுத்துவிட்டுத்தான் ஷர்துல் தாகூரை வாங்கியது கேகேஆர் அணி.
இலங்கையின் சாமிகா கருணரத்னே, ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபி, ஆஸ்திரேலிய டி20 அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச், இங்கிலாந்து அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய பெரிய வீரர்களையும் கேகேஆர் அணி விடுவித்துள்ளது. அஜிங்க்யா ரஹானே, ஷிவம் மாவி, அசோக் சர்மா, பாபா இந்திரஜித், பிரதம் சிங், ரமேஷ் குமார், ராசிக் சலாம், ஷெல்டான் ஜாக்சன், அபிஜித் டோமர் ஆகிய உள்நாட்டு வீரர்களையும் கேகேஆர் அணி விடுவித்தது.
வெறும் 14 வீரர்களை மட்டும் அணியில் பெற்றுள்ள கேகேஆர் அணி 16 விரர்களை விடுவித்துவிட்ட நிலையில், அந்த அணியிடம் வெறும் ரூ.7.05 கோடி மட்டுமே கையிருப்பில் உள்ள நிலையில், அந்த தொகைக்கு சிறிய வீரர்களை மட்டுமே எடுக்க முடியும்.
ஐபிஎல் 2023: சிஎஸ்கே விடுவித்த வீரர்கள், கையிருப்பில் இருக்கும் தொகை..! முழு விவரம்
கேகேஆர் அணி விடுவித்த வீரர்கள்:
பாட் கம்மின்ஸ், சாம் பில்லிங்ஸ், அமான் கான் (டெல்லி அணிக்கு கொடுக்கப்பட்ட வீரர்), ஷிவம் மாவி, முகமது நபி, சாமிகா கருணரத்னே, ஆரோன் ஃபின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், அபிஜித் டோமர், அஜிங்க்யா ரஹானே, அசோக் சர்மா, பாபா இந்திரஜித், பிரதம் சிங், ரமேஷ் குமார், ராசிக் சலாம், ஷெல்டான் ஜாக்சன்.
மற்ற அணிகளிடமிருந்து வாங்கிய வீரர்கள் - ஷர்துல் தாகூர், லாக்கி ஃபெர்குசன், ரஹ்மானுல்லா குர்பாஸ்.