ஐபிஎல் 2023: சிஎஸ்கே விடுவித்த வீரர்கள், கையிருப்பில் இருக்கும் தொகை..! முழு விவரம்

By karthikeyan V  |  First Published Nov 15, 2022, 6:54 PM IST

ஐபிஎல் 16வது சீசனுக்கு முன் ட்வைன் பிராவோ, ராபின் உத்தப்பா உட்பட 8 வீரர்களை விடுவித்துள்ளது சிஎஸ்கே அணி.
 


ஐபிஎல் 16வது சீசன் வரும் டிசம்பர் 23ம் தேதி நடக்கிறது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை விடுவித்துள்ளன. 

சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னராக கடந்த பல ஆண்டுகளாக திகழ்ந்த, டெத் ஓவர்களை அருமையாக வீசக்கூடிய ஆல்ரவுண்டர் ட்வைன் பிராவோவை சிஎஸ்கே அணி விடுவித்துள்ளது. பிராவோவை ரூ.4.4 கோடிக்கு கடந்த சீசனுக்கான ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே அணி, ஏலத்தில் இதைவிட குறைவான தொகைக்கு எடுக்கும் முனைப்பில் விடுவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

2023 ODI உலக கோப்பையை இந்தியா ஜெயிக்கும்னு சொன்னா அது முட்டாள்தனம்.! ஓவரா மட்டம்தட்டும் மைக்கேல் வான்

அவருடன் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டான், நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஆடம் மில்னே ஆகியோரையும் சிஎஸ்கே விடுவித்துள்ளது. ராபின் உத்தப்பா, தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் நாராயண் ஜெகதீசன், பகத் வர்மா, கேஎம் ஆசிஃப், ஹரி நிஷாந்த் ஆகிய உள்நாட்டு வீரர்களையும் சிஎஸ்கே விடுவித்துள்ளது.

சிஎஸ்கே விடுவித்த வீரர்கள் - ட்வைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கேஎம் ஆசிஃப், நாராயண் ஜெகதீசன்.

இந்தியாவிற்கு எதிரான டி20 & ஒருநாள் தொடருக்கான நியூசி., அணி அறிவிப்பு.! 2 பெரிய தலைகளுக்கு அணியில் இடம் இல்லை

இந்த சீசனுக்கான ஏலத்திற்கு ஒவ்வொரு அணிக்கும் கூடுதலாக ரூ.5 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த ரூ.5 கோடியுடன் சேர்த்து சிஎஸ்கே அணிக்கு ரூ.20.45 கோடி கையிருப்பில் உள்ளது. 
 

click me!