ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையையொட்டி கேரளாவில் லியோனல் மெஸ்ஸியின் கட் அவுட் ரசிகர்கள் தூக்கும்போது உடைந்தது, ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியது.
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் நவம்பர் 20ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. 22வது ஃபிஃபா உலக கோப்பை தொடர் நாளை(நவ.,20) தொடங்கும் நிலையில், கத்தார் விழாக்கோலம் பூண்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஃபிஃபா உலக கோப்பையில் 32 அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன. 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கத்தாரில் 8 மைதானங்களில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கின்றன.
undefined
இந்தியாவில் கால்பந்து அதிகமாக விளையாடப்படும் மற்றும் கொண்டாடப்படும் மாநிலங்கள் இரண்டு தான். கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 2 மாநிலங்களில் தான் கால்பந்து மிகப்பிரபலம். அந்தவகையில், ஃபிஃபா உலக கோப்பையை கொண்டாட தொடங்கிவிட்டனர் கேரள கால்பந்து ரசிகர்கள்.
கேரளாவில் உள்ள பல வீடுகளில் மஞ்சள் (பிரேசில்), வெள்ளை & நீலம்(அர்ஜெண்டினா) ஆகிய நிறங்களில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளன. சமகாலத்தின் கால்பந்து ஜாம்பவான்களான லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் நெய்மர் ஆகிய வீரர்களுக்கு மிகப்பெரிய கட் அவுட்டுகளை வைத்து மிரட்டியுள்ளனர் கேரள கால்பந்து ரசிகர்கள். மெஸ்ஸி, ரொனால்டோ ஆகிய ஜாம்பவான்களுக்கு இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் அவர்களை பெரியளவில் எதிர்பார்க்கின்றனர்.
கேரளாவில் குருங்காட்டு கடவு ஆற்று பகுதியில் லியோனல் மெஸ்ஸிக்கு 30 அடியில் ரசிகர்கள் பிரம்மாண்ட கட் அவுட் வைத்திருந்தனர். கேரள கால்பந்து ரசிகர்களின் ஆர்வத்தை கண்டி ஃபிஃபா-வே வியந்தது. மெஸ்ஸிக்கு கட் அவுட் வைத்தால், மற்றவர்களின் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா..? அதற்கருகிலேயே பிரேசில் வீரர் நெய்மருக்கு 40 அடி கட் அவுட் வைக்கப்பட்டது.
ரொனால்டோ ரசிகர்கள், நாங்க மட்டும் என்ன வெத்தா.? நாங்களும் கெத்துதான் என்பதை நிரூபிக்கும் விதமாக மெஸ்ஸி, நெய்மர் கட் அவுட்டுகளை விட உயரமாக ரொனால்டோவின் கட் அவுட்டை வைத்து அசத்தினர்.
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை: கடும் கட்டுப்பாடுகளால் கதறும் ரசிகர், ரசிகைகள்..!
ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்ட மெஸ்ஸியின் கட் அவுட் ரசிகர்கள் தூக்கும்போது உடைந்தது. உடைந்தது மெஸ்ஸியின் கட் அவுட் மட்டுமல்ல.. அங்கிருந்த மெஸ்ஸியின் மற்றும் கால்பந்து ரசிகர்களின் மனதும் தான். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.