NZ vs IND: 2வது டி20 போட்டிக்கான நியூசிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவன்..!

Published : Nov 19, 2022, 10:33 PM IST
NZ vs IND: 2வது டி20 போட்டிக்கான நியூசிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவன்..!

சுருக்கம்

இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் களமிறங்கும் நியூசிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

டி20 உலக கோப்பை அரையிறுதியில் தோற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது டி20 போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் நியூசிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

தொடர்ந்து 4 சதங்கள்.. சங்கக்கராவின் சாதனையை சமன் செய்த தமிழ்நாடு வீரர் ஜெகதீசன்! கழட்டிவிட்டு கதறும் சிஎஸ்கே

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் - டெவான் கான்வே ஆகிய இருவரும் தான் ஆடுவார்கள். நியூசிலாந்தின் சீனியர் அதிரடி தொடக்க வீரரான மார்டின் கப்டிலின் டி20 கெரியர் முடிந்துவிட்டது என்றே கூறலாம். ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத மார்டின் கப்டில், டி20 உலக கோப்பையிலும் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. இளம் அதிரடி தொடக்க வீரர் ஃபின் ஆலன் தான் ஓபனிங்கில் ஆடினார். அவர் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்து அணியின் நம்பிக்கையை பெற்றதால் இனி அவரும் டெவான் கான்வேவும் தான் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள்.

3ம் வரிசையில் வில்லியம்சன், 4ம் வரிசையில் க்ளென் ஃபிலிப்ஸ், 5ம் வரிசையில் டேரைல் மிட்செல், 6ம் வரிசையில் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் இறங்குவார்கள். ஸ்பின்னராக மிட்செல் சாண்ட்னெர் மட்டும் ஆடுவார். ஃபாஸ்ட் பவுலர்களாக டிம் சௌதி, ஆடம் மில்னே, லாக்கி ஃபெர்குசன் மற்றும் டிக்னெர் ஆகிய நால்வரும் ஆடுவார்கள். இந்த தொடரில் டிரெண்ட் போல்ட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ராகுல் டிராவிட்டை விமர்சித்த ரவி சாஸ்திரிக்கு அஷ்வின் பதிலடி

உத்தேச நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, ஆடம் மில்னே, லாக்கி ஃபெர்குசன், பிளயர் டிக்னெர்.
 

PREV
click me!

Recommended Stories

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
கிரிக்கெட்டை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஐபிஎல் உரிமையாளரை விளாசிய கவுதம் கம்பீர்! என்ன நடந்தது?