விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு வீரர் நாராயண் ஜெகதீசன் தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.
உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த தொடரில் ஜெகதீசனின் அபாரமான பேட்டிங்கால் தமிழ்நாடு அணி தொடர் வெற்றிகளை பெற்றுவருகிறது.
ஆந்திராவிற்கு எதிரான போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசன் சதமடித்தார். அந்த போட்டியில் 206 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் ஜெகதீசன் அபாரமாக ஆடி 114 ரன்களை குவித்தார். அவரது அதிரடி சதத்தால் 33வது ஓவரிலேயே இலக்கை அடித்து தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.
ராகுல் டிராவிட்டை விமர்சித்த ரவி சாஸ்திரிக்கு அஷ்வின் பதிலடி
அதன்பின்னர் சத்தீஸ்கருக்கு எதிரான போட்டியில் 107 ரன்களை குவித்த ஜெகதீசன், கோவாவுக்கு எதிராக 140 பந்தில் 168 ரன்களை குவித்து இந்திய அணியின் அபார வெற்றிக்கு உதவினார்.
தொடர்ச்சியாக 3 சதங்களை அடித்திருந்த ஜெகதீசன், ஹரியானாவுக்கு எதிராக இன்று நடந்த போட்டியிலும் சதமடித்தார். ஹரியானாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் ஜெகதீசன் அபாரமாக பேட்டிக் ஆடி இந்த போட்டியிலும் சதமடித்து 128 ரன்களை குவித்தார். சாய் சுதர்சன் 67 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 284 ரன்களை குவித்த தமிழ்நாடு அணி, ஹரியானாவை 133 ரன்களுக்கு சுருட்டி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடர்ச்சியாக 4 சதங்களை அடித்த ஜெகதீசன் அபார சாதனை படைத்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் (இதில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டும் அடங்கும்) தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனை பட்டியலில் இலங்கை முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்கராவை சமன் செய்துள்ளார். 2015 ஒருநாள் உலக கோப்பையில் சங்கக்கரா தொடர்ந்து 4 சதங்கள் அடித்து சாதனை படைத்தார். விஜய் ஹசாரேவில் கர்நாடக வீரரான தேவ்தத் படிக்கல்லும் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்துள்ளார். தென்னாப்பிரிக்க வீர ஆல்விரோ பீட்டர்சனும் தொடர்ந்து 4 சதங்கள் அடித்துள்ளார்.
NZ vs IND: 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! யார் யாருக்கு வாய்ப்பு..?
சங்கக்கரா, ஆல்விரோ பீட்டர்சன், தேவ்தத் படிக்கல் ஆகியோருடன் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார் ஜெகதீசன். அடுத்த போட்டியிலும் சதமடித்தால், இவர்களை பின்னுக்குத்தள்ளி வரலாற்று சாதனை படைத்துவிடுவார்.