ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை முதல் போட்டியை டுவிட்டரில் நேரலையாக பார்க்கலாம் என்று டுவிட்டர் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் நவம்பர் 20ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. 22வது ஃபிஃபா உலக கோப்பை தொடர் நாளை(நவ.,20) தொடங்கும் நிலையில், கத்தார் விழாக்கோலம் பூண்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஃபிஃபா உலக கோப்பையில் 32 அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன. 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கத்தாரில் 8 மைதானங்களில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கின்றன.
undefined
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை: கடும் கட்டுப்பாடுகளால் கதறும் ரசிகர், ரசிகைகள்..!
நவம்பர் 20ம் தேதி முதல் டிசம்பர் 18 வரை ஃபிஃபா உலக கோப்பை போட்டிகள் நடக்கின்றன. டிசம்பர் 18ம் தேதி இறுதிப்போட்டி லூசைல் ஸ்டேடியத்தில் நடக்கிறது. நவம்பர் 20 முதல் டிசம்பர் 3 வரை க்ரூப் போட்டிகளும், டிசம்பர் 3 முதல் 6 வரை காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகளும், டிசம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் காலிறுதி போட்டிகளும், டிசம்பர் 14 மற்றும் 15ல் அரையிறுதி போட்டிகளும், டிசம்பர் 17ம் தேதி 3வது இடத்திற்கான போட்டியும் டிசம்பர் 18ம் தேதி இறுதிப்போட்டியும் நடக்கவுள்ளன.
க்ரூப் போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 3.30, 6.30 மணிக்கும், இரவு 8.30 மற்றும் 9.30 மணிக்கும் தொடங்கும். காலிறுதிக்கு முந்தைய சுற்று மற்றும் காலிறுதி போட்டிகள் இரவு 8.30 மற்றும் இரவு 10.30 மணிக்கு தொடங்கும். அரையிறுதி போட்டிகள் இரவு 10.30 மணிக்கும், இறுதிப்போட்டி இரவு 8.30 மணிக்கும் தொடங்கும்.
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டிகளை ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் பார்க்கலாம். Viacom 18 ஆங்கிலம் மற்றும் இந்தி சேனல்களில் பார்க்கலாம். மற்ற பிராந்திய மொழிகளிலும் ஒளிபரப்பப்படவுள்ளது. VOOT, ஜியோ TV, ஜியோ சினிமா ஆகிய ஆன்லைன்களிலும் பார்க்க முடியும்.
ஃபிஃபா உலக கோப்பையில் ஆடும் சில கால்பந்து வீரர்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
இந்நிலையில், ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியை டுவிட்டரில் நேரலையாக பார்க்கலாம் என்று டுவிட்டர் புதிய உரிமையாளரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், ஃபிஃபா உலக கோப்பை என்று குறிப்பிடாமல் நவம்பர் 20ம் தேதி முதல் போட்டியை டுவிட்டரில் பார்க்கலாம் என்று பதிவிட்டுள்ளார். நவம்பர் 20ம் தேதி (நாளை) ஃபிஃபா உலக கோப்பை தான் தொடங்குகிறது என்பதால் அவர் ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகளைத்தான் டுவிட்டரில் நேரலையில் காணலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
First World Cup match on Sunday! Watch on Twitter for best coverage & real-time commentary.
— Elon Musk (@elonmusk)