AUS vs ENG: 2வது ODI-யில் 72 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா

By karthikeyan V  |  First Published Nov 19, 2022, 4:48 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி.
 


ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றூ 1-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடந்தது.

இந்த போட்டியில் இரு அணிகளின் கேப்டன்களும் ஆடவில்லை. ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் ஆடாததால் ஜோஷ் ஹேசில்வுட் கேப்டன்சி செய்தார். இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஆடாததால், மொயின் அலி கேப்டன்சி செய்தார். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

Tap to resize

Latest Videos

இந்திய அணி தேர்வாளர்கள் அனைவரும் நீக்கம்..! பிசிசிஐ அதிரடி

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அஷ்டான் அகர், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட் (கேப்டன்).

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஃபிலிப் சால்ட், டேவிட் மலான், ஜேம்ஸ் வின்ஸ், சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), மொயின் அலி (கேப்டன்), கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், லியாம் டாவ்சன், டேவிட் வில்லி, அடில் ரஷீத்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் (16) மற்றும் டிராவிஸ் ஹெட் (19) ஆகிய இருவரும் இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 43 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ஸ்டீவ் ஸ்மித்தும் மார்னஸ் லபுஷேனும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்தனர். 3வது விக்கெட்டுக்கு 101 ரன்களை சேர்த்தனர். மார்னஸ் லபுஷேன் 58 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அலெக்ஸ் கேரி ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். அதன்பின்னர் மிட்செல் மார்ஷ் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.

மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய ஸ்டீவ் ஸ்மித் சதத்தை நெருங்கிய நிலையில், 94 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். மிட்செல் மார்ஷ் 50 ரன்கள் அடித்தார். ஸ்மித், லபுஷேன், மிட்செல் மார்ஷின் அரைசதங்களால் 50 ஓவரில் 280 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி.

NZ vs IND:எவ்வளவு சூப்பர் பிளேயர் அந்த பையன்; அவரை ஏன் டீம்ல எடுக்கல? இந்திய அணி தேர்வை விளாசிய முன்னாள் வீரர்

281 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் சாம் பில்லிங்ஸ் ஆகிய இருவர் மட்டுமே நன்றாக பேட்டிங் ஆடினர். பில்லிங்ஸ் 71 ரன்களும், வின்ஸ் 60 ரன்களும் அடித்தனர். மற்ற அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 39வது ஓவரில் 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.
 

click me!