நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் பிரித்வி ஷாவை எடுக்காதது பெரும் வியப்பாக இருப்பதாக ஆகாஷ் சோப்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை தோல்விக்கு பின் இந்திய அணியின் டி20 ஆட்ட அணுகுமுறையை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. டி20 உலக கோப்பையில் பவர்ப்ளேயில் இந்திய அணி அதிகபட்சமாக அடித்ததே 46 ரன்கள் தான். அதுவும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் அடிக்கப்பட்டது.
பவர்ப்ளேயில் ஃபீல்டிங் கட்டுப்பாடுகளை பயன்படுத்தி அதிரடியாக ஆடி முடீந்தவரை ஸ்கோர் செய்து நல்ல தொடக்கத்தை அமைப்பதுதான் பெரிய ஸ்கோர் அடிக்க உதவும். ஆனால் இந்திய அணி டி20 உலக கோப்பையில் அதை செய்ய தவறியதுதான் பெரும் பாதிப்பாக அமைந்தது.
இந்திய அணியின் சீனியர் வீரர்களை ஓரங்கட்டிவிட்டு, இளம் வீரர்களை அணியில் எடுத்து வலுவான அணியை அடுத்த டி20 உலக கோப்பைக்கு தயார்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன. அந்தவகையில், ரோஹித், கோலி, பும்ரா, ஜடேஜா, ராகுல் ஆடாத நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர்களுக்கு ஆட வாய்ப்பு கிடைத்துள்ளது.
டி20 உலக கோப்பையில் ரோஹித்தும் டிராவிட்டும் சாஹலை ஆடவைக்காதது ஏன்..? தினேஷ் கார்த்திக் விளக்கம்
நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர் என இளம் வீரர்கள் பலருக்கு இடம் கிடைத்துள்ள நிலையில், இவர்களுக்கெல்லாம் முன் இந்திய அணியில் இடம்பிடித்த, பவர்ப்ளேயில் அடித்து ஆடி மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுக்கவல்ல பிரித்வி ஷாவுக்கு அணியில் இடம் கிடைக்காதது பெரும் வியப்பாக இருப்பதாக ஆகாஷ் சோப்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பிரித்வி ஷாவை 3 விதமான ஃபார்மட்டிலும் இந்திய அணிக்காக ஆடுவதை பார்க்க விரும்புவதாக அண்மையில் வீரேந்திர சேவாக் கூறியிருந்தார். இந்நிலையில், பிரித்வி ஷா குறித்து கருத்து கூறியுள்ள ஆகாஷ் சோப்ரா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் பிரித்வி ஷாவை எடுக்காதது பெரும் வியப்பாக இருக்கிறது. பவர்ப்ளேயில் ஆடும் ஸ்டைலை இந்திய அணி மாற்ற வேண்டியிருக்கிறது. இயல்பாகவே பெரிய ஷாட்டுகளை எளிதாக ஆடக்கூடியவர் பிரித்வி ஷா. அவரை கண்டிப்பாக அணியில் எடுத்திருக்க வேண்டும். ஐபிஎல்லை வைத்து இந்திய அணி தேர்வு செய்வதை தேர்வாளர்கள் நிறுத்த வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.