இந்திய டி20 அணியில் ரிஷப் பண்ட்டுக்கு புதிய ரோல்..! அந்த பேட்டிங் ஆர்டரில் ரிஷப் பண்ட் ரொம்ப டேஞ்சரஸ் பிளேயர்

By karthikeyan V  |  First Published Nov 18, 2022, 6:55 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ரிஷப் பண்ட்டை ஓபனிங்கில் இறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து கூறியுள்ளார்.
 


டி20 உலக கோப்பையை தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. டி20 உலக கோப்பை தோல்விக்கு பின், இளம் வீரர்கள் கொண்ட வலுவான டி20 அணியாக இந்திய அணியை உருவாக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன.

டி20 அணியில் இருக்கும் சீனியர் வீரர்களை ஓரங்கட்டிவிட்டு, இளம் வீரர்களை கொண்ட வலுவான அணியை அடுத்த டி20 உலக கோப்பைக்கு கட்டமைக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்திவருகின்றனர்.

Tap to resize

Latest Videos

ஹர்திக் பாண்டியாவிடம் கபில் தேவை பார்க்கிறேன்..! ரவி சாஸ்திரி புகழாரம்

ரோஹித், கோலி, ராகுல், பும்ரா, ஜடேஜா ஆடாத இந்த நியூசிலாந்து டி20 தொடர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க சரியான தொடர். இந்த தொடரில் இந்திய அணி ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் ஆடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில், இஷான் கிஷன், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா என வீரர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா கண்டிப்பாக 4 மற்றும் 5ம் பேட்டிங் வரிசைகளில் ஆடுவார்கள் என்பதால், இவர்களில் யார் யாருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

மேலும் யார் யார் எந்தெந்த பேட்டிங் ஆர்டரில் ஆடுவார்கள் என்பதும் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், ரிஷப் பண்ட்டுக்கு எந்த பேட்டிங் ஆர்டர் சரியாக இருக்கும் என்று வாசிம் ஜாஃபர் கருத்து கூறியுள்ளார்.

ஷாஹீன் அஃப்ரிடி வலி நிவாரணி எடுத்துட்டு ஆடியிருக்கணும்..! மருமகனை பற்றி பேசிய அக்தரை விளாசிய அஃப்ரிடி

இதுகுறித்து பேசியுள்ள வாசிம் ஜாஃபர், ரிஷப் பண்ட் ஃபினிஷர் கிடையாது. அவர்  டெல்லி கேபிடள்ஸ் அணியில் 4 அல்லது 5ம் ஆர்டரில் பேட்டிங் ஆடுகிறார். ஆனால் இந்திய அணியில் 4 மற்றும் 5ம் பேட்டிங் ஆர்டரை சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா நிரந்தரமாக பிடித்துவிட்டனர். ஃபீல்டிங் கட்டுப்பாடுகள் இருக்கும் பவர்ப்ளேயில் ரிஷப் பண்ட் அபாயகரமான வீரர். எனவே அவரை தொடக்க வீரராக இறக்கவேண்டும். அதுதான் அவருக்கு சரியான பேட்டிங் ஆர்டர். அவர் பவர்ப்ளேயில் 20-30 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்துவிட்டால், அதன்பின்னர் அபாயகரமான வீரராக திகழ்வார். அதன்பின்னர் ஃபீல்டர்கள் பவுண்டரி லைனில் நின்றாலும் அதெல்லாம் ரிஷப்புக்கு ஒரு விஷயமே கிடையாது. எனவே அவரை ஓபனிங்கில் இறக்கவேண்டும் என்று வாசிம் ஜாஃபர் கருத்து கூறியுள்ளார்.
 

click me!