டி20 உலக கோப்பையில் ரோஹித்தும் டிராவிட்டும் சாஹலை ஆடவைக்காதது ஏன்..? தினேஷ் கார்த்திக் விளக்கம்

By karthikeyan V  |  First Published Nov 18, 2022, 7:56 PM IST

டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலை ஆடவைக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், அதுகுறித்து தினேஷ் கார்த்திக் விளக்கமளித்துள்ளார்.
 


டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்று தொடரைவிட்டு வெளியேறியது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அரையிறுதியில் இந்திய அணி தோற்றவிதம் கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 168 ரன்களை அடித்தது இந்திய அணி. 169 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

Tap to resize

Latest Videos

undefined

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாததுதான் முக்கிய காரணமாக அமைந்தது. உலக கோப்பை தொடர் முழுக்க அஷ்வின் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினார். அஷ்வின் - அக்ஸர் படேல் ஸ்பின் ஜோடியால் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்தி கொடுக்க முடியவில்லை. அதுதான் பெரும் பின்னடைவாக அமைந்தது. அரையிறுதி போட்டியிலும் அது எதிரொலித்தது.

இந்திய டி20 அணியில் ரிஷப் பண்ட்டுக்கு புதிய ரோல்..! அந்த பேட்டிங் ஆர்டரில் ரிஷப் பண்ட் ரொம்ப டேஞ்சரஸ் பிளேயர்

இந்திய அணியின் பலமே ஸ்பின் பவுலிங் தான். ஆனால் இந்த உலக கோப்பையில் அதுவே பெரும் பின்னடைவாக அமைந்தது. அஷ்வின் விக்கெட் வீழ்த்தமுடியாமல் திணறியபோதிலும் யுஸ்வேந்திர சாஹலுக்கு ஆட வாய்ப்பளிக்காதது கடும் சர்ச்சைக்குள்ளானது. ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் மற்ற அணிகளின் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டபோதிலும், சாஹலுக்கு ஆடவாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் தான் விளக்கமளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்திவரும் நிலையில், அதுகுறித்து தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.

ஹர்திக் பாண்டியாவிடம் கபில் தேவை பார்க்கிறேன்..! ரவி சாஸ்திரி புகழாரம்

இதுகுறித்து கருத்து கூறிய தினேஷ் கார்த்திக், சாஹல் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவருக்கும் டி20 உலக கோப்பையின் தொடக்கத்திலேயே இந்திய அணியின் ஆடும் லெவனில் அவர்களுக்கு இடம் இல்லை என்பது தெரியப்படுத்தப்பட்டுவிட்டது. கண்டிஷனுக்கு தேவைப்பட்டால் மட்டுமே அவர்களை ஆடவைப்பதாக முன்னதாகவே தெரிவிக்கப்பட்டுவிட்டது. எனவே அவர்களுக்கு முதன்மையான ஆடும் லெவனில் இடம் இல்லை என்பது அவர்களுக்கே தெரியும். கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் தெளிவு இருக்கும்போது, வீரர்களுக்கும் அதற்கேற்ப தயாராவது எளிது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
 

click me!