ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை: கடும் கட்டுப்பாடுகளால் கதறும் ரசிகர், ரசிகைகள்..!

By karthikeyan VFirst Published Nov 18, 2022, 10:04 PM IST
Highlights

கத்தாரில் நடக்கும் 22வது ஃபிஃபா உலக கோப்பையை காணும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் வரும் 20ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை கத்தாரில் நடக்கிறது. ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் மத்திய ஆசிய நாட்டில் நடப்பது இதுவே முதல் முறை.32 அணிகள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. உலகின் மிகப்பெரும் விளையாட்டு திருவிழாவான ஃபிஃபா உலக கோப்பையை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். கத்தார் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஃபிஃபா உலக கோப்பையில் கலந்துகொள்ளும் 32 அணிகள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆடுகின்றன. 

குரூப் ஏ - கத்தார், ஈகுவடார், செனெகல், நெதர்லாந்து
குரூப் பி - இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்
குரூப் சி - அர்ஜெண்டினா, சௌதி அரேபியா, போலந்து, மெக்ஸிகோ
குரூப் டி - ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா

ஃபிஃபா உலக கோப்பையில் ஆடும் சில கால்பந்து வீரர்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
குரூப் இ - ஸ்பெயின், கோஸ்டாரிக்கா, ஜெர்மனி, ஜப்பான்
குரூப் எஃப் - கனடா, பெல்ஜியம், மொராக்கோ, குரோஷியா
குரூப் ஜி - பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேம்ரூன்
குரூப் ஹெச் - போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா

கத்தாரில் 8 மைதானங்களில் ஃபிஃபா உலக கோப்பை போட்டிகள் நடக்கின்றன. லுசைல் ஸ்டேடியம், அல் பேத் ஸ்டேடியம், ஸ்டேடியம் 974, கலீஃபா சர்வதேச அரங்கம், எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியம், அல் துமாமா ஸ்டேடியம், அல் ஜனுப் ஸ்டேடியம், அகமது பின் அலி ஸ்டேடியம் ஆகிய 8 மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன.

இந்நிலையில், ஃபிஃபா உலக கோப்பையை காணும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கத்தார் நாட்டில் பெண்களுக்கு உடை கட்டுப்பாடுகள் உள்ளன. கத்தாரில் பெண்கள் உடல் அங்கம் தெரியாதவகையில் உடை அணிய வேண்டும். ஆனால் மேற்கத்திய நாடுகளில் போட்டிகளை காண ஸ்டேடியங்களுக்கு செல்லும் ரசிகைகளுக்கு உடை கட்டுப்பாடுகள் எல்லாம் கிடையாது. சில சமயங்களில் வெற்றிகளை மேலாடையை கழற்றி கூட கொண்டாடுவார்கள். இந்நிலையில், பெண்கள் கண்ணியமாகத்தான் உடையணிய வேண்டும்; கண்டபடி உடை அணியக்கூடாது என்று கத்தார் நாட்டில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது மேற்கத்திய நாட்டு கால்பந்து ரசிகைகளுக்கு ரொம்ப கஷ்டமான விஷயம்.

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை: பயிற்சி போட்டிகளில் அர்ஜெண்டினா, ஜெர்மனி அணிகள் வெற்றி

மேலும், ஸ்டேடியங்களில் ரசிகர்கள் மது அருந்துவதை தடுக்கும் விதமாக போட்டிகள் நடக்கும் ஸ்டேடியங்களின் சுற்று வட்டாரப்பகுதிகளில் கூட பீர் விற்பனை செய்யக்கூடாது என்று கத்தார் நாட்டு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் ரசிகர்கள் ஸ்டேடியங்களில் பீர் அருந்தியபடியே போட்டிகளை கண்டு ரசிக்கலாம். எனவே மேற்கத்திய ரசிகர்கள் இதுமாதிரியான கட்டுப்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ளனர்.
 

click me!