ஒலிம்பிக் வரலாற்றில் 28 பதக்கங்களை குவித்த நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் உடல் அமைப்பு பற்றிய அறிவியல் கூற்று

By Rsiva kumar  |  First Published Jul 22, 2024, 10:13 PM IST

ஒலிம்பிக் வரலாற்றில் 23 தங்கம் குவித்த அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் உடல் அமைப்பு மற்றும் கடின உழைப்பு அவருக்கு 28 பதக்கங்களை குவிக்க காரணமாக இருந்துள்ளது.


பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் வரும் 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் இடம் பெற்ற 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறன்றன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 10,714 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

யார் இந்த அபிஷேக் நாயர்? இந்திய அணியில் இணைந்த கேகேஆர் துணை பயிற்சியாளர்!

Latest Videos

undefined

இந்தியா சார்பில் நீச்சல் போட்டியில் ரிச்சா மிஸ்ரா மற்றும் ஸ்ரீஹரி நடராஜ் என்று 2 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இதுவரையில் நீச்சல் போட்டியில் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நீச்சல் போட்டியில் மட்டுமே ஒலிம்பிக்கில் 23 தங்கப் பதக்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெணகல் பதக்கம் என்று மொத்தமாக 28 பதக்கங்களை ஒருவர் பெற்றிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தான் அவர். கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் தொடரின் மூலாக ஓய்வு பெற்றார். மைக்கேல் பெல்ஸின் உயரம், இறக்கைகள் மற்றும் பெரிய கை, கால்கள் அவருக்கு நீச்சலில் பல சாதனைகளை படைக்க காரணமாக அமைந்திருக்கின்றன. மைக்கேல் பெல்ப்ஸின் உடலானது குறைவான லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்கிறது. அவரது இந்த சாதனைக்கு கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி தான் காரணம்.

இலங்கை சென்றடைந்த இந்திய அணி வீரர்கள் – தலைமை பயிற்சியாளராக பணியை தொடங்கும் கவுதம் காம்பீர்!

மைக்கேல் பெல்ப்ஸ் நீச்சலில் சிறந்து விளங்க என்ன காரணம்?

இவருக்கு பதக்கம் என்பது 2ஆவது வீடு மாதிரி தான். ஏனென்றால் ஒலிம்பிக் 23 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெணகலம் என்று மொத்தமாக 28 பதக்கங்களை குவித்திருக்கிறார். அவரது ஜெனிடிக்ஸ் (மரபியல்), திறமை மற்றும் கடின உழைப்பு ஆகிவற்றின் மூலமாக அதிக பதக்கங்களை குவித்துள்ளார். மேலும், அவரது வித்தியாசமான உடல் அமைப்பும் அறிவியல் ரீதியாக ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதைப் பற்றி பார்க்கலாம் வாங்க…

Sastika Rajendran: யார் இந்த அழகு தேவதை? டிஎன்பிஎல் தொடரை தொகுத்து வழங்கும் சஸ்திகா ராஜேந்திரன்!

உயரம்:

நீச்சல் வீரருக்கு உயரம் வெற்றியில் பெரும் பங்கு வகிக்கிறது. பெல்ப்ஸ் 6.4 அங்குலம் உயரம் கொண்டவர். கடந்த 2016 ஒலிம்பிக் இறுதிப் போட்டியாளரது சராசரி உயரம் 6 அடி 2 அங்குலம். உயரம் மட்டுமின்றி நீண்ட கைகளையும் கொண்டுள்ளார்.

கை:

பெல்ப்ஸின் கை நீளம் 6.7 அங்குலம் (இஞ்ச்). இது அவரது உயரத்தை விட 3 அங்குலம் அதிகம். பொதுவாகவே ஒருவரது கை நீளம் அவரது உயரத்திற்கு சமமானதாக இருக்கும். ஆனால், பெல்ப்ஸ் சற்று வினோதமானவர். நீச்சல் போட்டியில் முன்னோக்கி நீந்தி செல்வதற்கு போட்டியாளர்களை விட அவரது கை படகு துடுப்புகளாக அதிக வேலைகளை செய்கின்றன.

உடற்பகுதி:

பெல்ப்ஸின் மேல் உடலானது 6.8 அங்குலம் நீளம் கொண்டது. இது அவரை வேகமாக நீந்துவதற்கு உதவுகிறது.

உடலின் கீழ்பகுதி:

இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவரது கீழ் உடல் 5.10 அங்குலம் நீளம் கொண்டதாக உள்ளது. இது தண்ணீருக்கு எதிராக அவரது இழுவையை குறைக்க உதவுகிறது.

உள்ளங்கை மற்றும் கால்கள்:

பெல்ப்ஸின் உள்ளங்கை 14 அடி உயரம் கொண்டுள்ளது. இது அவரை படகு துடுப்புகளாக வேகமாக இயங்க வைக்கிறது. அவரது மிகப்பெரிய கால்கள் சுறாவைப் போன்று வேலை செய்ய உதவுகின்றன.

 

click me!