பாரீஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் வரும் 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரும் 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிலிருந்து நீரஜ் சோப்ரா, பிவி சிந்து, சுமித் நாகல், ரோகன் போபண்ணா, துலிகா மான், விஷ்ணு சரவணன், பால்ராஜ் போவிங், மானவ் தக்கர், அனுஷ் அகர்வாலா, நிஷாந்த் தேவ் ஆகியோர் உள்பட 66 வீரர்கள் மற்றும் 47 வீராங்கள் உள்பட மொத்தமாக 113 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர்.
விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம், பரிசுகள் வெல்வது என்பது ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கனவாக இருக்கும். இதுவே உலக அளவில் நடக்கும் முக்கியமான போட்டியாக இருந்தால் அதற்கு சொல்லவே வேணாம். அந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அப்படி முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு விளையாட்டு போட்டி தான் பாரீஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு போட்டி.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித், கோலி, பும்ரா விளையாட வேண்டும் – காம்பீர் வேண்டுகோள்!
இந்த நிலையில் தான் இந்த பாரீஸ் ஒலிம்பிக் 2024 விளையாட்டு போட்டி நடத்துவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரூ.61,500 கோடி வரையில் செலவிட்டுள்ளனர். இதில் ஒலிம்பிக் போட்டியில் முதல் பரிசு வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கத்தின் விலை ரூ.75 லட்சம் ஆகும். இதே போன்று வெள்ளிப் பதக்கத்தின் விலை ரூ.50 லட்சம, வெண்கலப் பதக்கத்தின் விலை ரூ.30 லட்சம் ஆகும்.
5084 பதக்கங்கள்:
இந்த ஒலிம்பிக் தொடருக்கு 5084 பதக்கங்கள் மொன்னே டி பாரிஸால் தயாரிக்கப்படும். பாரீஸ் மிண்ட் என்பது பிரான்ஸ் நாட்டு நாணயங்களை தயாரிப்பதற்குரிய அரசுக்கு சொந்தமான நிறுவனம் ஆகும். இதன் மூலமாக பதக்கங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த பதக்கங்கள் எல்லாவற்றையும் பாரீஸை தளமாக கொண்டு செயல்படும் சௌமெட் என்ற ஆடம்பர நகை நிறுவனம் வடிவமைத்துள்ளது. பதக்கத்தின் பின்புறத்தில் கிரேக்க தெய்வமான நைக் இடம் பெற்றுள்ளது. இது, 1986 ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய பனாதெனிக் ஸ்டேடியத்தில் உள்ள வெற்றியின் தெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது.
பதக்கத்தின் எடை:
ஒவ்வொரு பதக்கமும் 455–529 கிராம் எடையும், 85 மிமீ (3.3 அங்குலம்) விட்டமும், 9.2 மிமீ (0.36 அங்குலம்) தடிமனும் கொண்டுள்ளது. தங்கப் பதக்கம் 98.8 சதவிகிதம் வெள்ளி மற்றும் 1.13 சதவிகிதம் தங்கம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வெண்கலப் பதக்கமானது தாமிரம், துத்தநாகம், தகரம் ஆகியவற்றால் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி நடைபெறும் 35 இடங்கள்:
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் பாரீஸை சுற்றிலும் நடைபெற உள்ளது. இதற்காக ஸ்டேட் டி பிரான்ஸ் (கால்பந்து), ரோலண்ட் கரோஸ் ஸ்டேடியம் (டென்னிஸ்) மற்றும் சாம்ப்ஸ் எலிசீஸ் உள்பட 35 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் 2024 – 10,500 வீரர், வீராங்கனைகள்:
இந்தியா உள்பட மற்ற நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் என்று மொத்தமாக 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர்.
32 விளையாட்டுகள் 300 போட்டிகள்:
கோடைகால ஒலிம்பிக்கில் 32 விளையாட்டுகளில் 300 போட்டிகளில் 10,000க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்க இருக்கின்றனர். நீச்சல் முதல் சைக்கிள் ஓட்டுதல் வரையில் 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.