உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் வெற்றியாளருக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

By Rsiva kumar  |  First Published Aug 23, 2023, 5:39 PM IST

அஜர்பைஜானில் நடந்து வரும் உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு 1,10,000 டாலர் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.


அஜர்பைஜானில் உள்ள பாகு பகுதியில் உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது. கடந்த 30 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை தொடரானது 24ஆம் தேதி நாளை வரை நடக்கிறது. இந்த செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்கள் உள்பட 206 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில், உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2 சுற்றுகளாக நடந்து வருகிறது. இதில், ஆர் பிரக்ஞானந்தா மற்றும் மேகன்ஸ் கார்ல்சன் ஆகியோர் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றனர்.

உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் ஃபைனல்: 2ஆம் கட்ட போட்டி தொடங்கியது: வெற்றி பெறுவாரா பிரக்ஞானந்தா?

Tap to resize

Latest Videos

முதல் சுற்றுப் போட்டி டிராவில் முடிந்த நிலையில், தற்போது 2ஆவது சுற்று போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், பிரக்ஞானந்தா ஒயிட் காயினுடன் விளையாடி வருகிறார். தற்போது வரையில் 16 மூவ் முடிந்துள்ள நிலையில், போட்டியானது டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதில், மேக்னஸ் கார்ல்ஸ் தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடி வரும் நிலையில், பிரக்ஞானந்தா நிதானமாக விளையாடி வருகிறார்.

ஆசிய கோப்பைக்கு தாயாரகும் டீம் இந்தியா; பெங்களூருக்கு வருகை தரும் சீனியர் வீரர்கள்!

இந்த நிலையில், இன்றைய போட்டி டிராவில் முடிந்தால் டை பிரேக்கர் சுற்று மூலமாக வெற்றியாளர் தீர்மானிக்கப்படும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு பரிசுத் தொகையாக 1,10,000 டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது. 2ஆவது இடம் பிடிக்கும் போட்டியாளருக்கு 80,000 டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடருக்காக சிஎஸ்கே பயிற்சியாளரை தட்டி தூக்கிய நியூசிலாந்து!

click me!