பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்க போட்டியில் வில்வித்தையில் தீரஜ் பொம்மதேவரா, அங்கீதா பகத் ஜொடி அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 7ஆவது நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இன்று பிற்பகல் 1.19 மணிக்கு நடைபெற்ற வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் எலிமினேஷன் சுற்று போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா மற்றும் அங்கீதா பகத் ஜோடியானது வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
undefined
இதையடுத்து மாலை 5.45 மணிக்கு நடைபெற்ற காலிறுதி போட்டியில் ஸ்பெயின் ஜோடியை எதிர்கொண்டது. இதில், 5-3 என்ற கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து இரவு 7.01 மணிக்கு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தென் கொரியா ஜோடியை எதிர்கொண்டது. இதில், 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதையடுத்து இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அமெரிக்கா ஜோடி எதிர்கொண்டது.
IND vs SL 1st ODI: பதும் நிசாங்கா, துணித் வெல்லாலகே சிறப்பான அரைசதம் – இலங்கை 230 ரன்கள் குவிப்பு!
இந்த நிலையில் தான் இரவு 7.54 மணிக்கு நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அமெரிக்கா ஜோடியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 2-6 என்ற கணக்கில் இந்திய ஜோடியானது தோல்வி அடைந்து 4ஆவது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறியது. வில்வித்தையில் ஆண்களுக்கான தனிநபர் மற்றும் அணி போட்டியிலும், மகளிருக்கான தனிநபர் மற்றும் அணி போட்டியிலும் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் தோல்வி அடைந்து பதக்க வாய்ப்புகளை இழந்து வெளியேறியுள்ளனர். இதில் தீபிகா குமாரி மற்றும் பஜன் கவுர் மட்டும் தனிநபர் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.