வார்னரின் அதிரடியை மீண்டும் பார்க்கணுமா..? வெஸ்ட் இண்டீஸில் மெர்சல் காட்ட தயாராகிட்டாரு

First Published Jun 17, 2018, 3:09 PM IST
Highlights
david warner is going to play in cpl


பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்ட வார்னர், கிளப் மற்றும் லீக் போட்டிகளில் ஆட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், வெஸ்ட் இண்டீஸில் நடக்க உள்ள கரீபீயன் பிரீமியர் லீக் போட்டிகளில் வார்னர் ஆட உள்ளார்.  

கடந்த மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஆடியது. அப்போது கேப்டவுனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டும் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்களும் கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டது. 

அதனால், வார்னரும் ஸ்மித்தும் ஐபிஎல் தொடரில் ஆடவில்லை. ஆனால் கனடா லீக் போட்டிகளில் ஆட ஸ்மித்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்ததை அடுத்து அந்த தொடரில் ஸ்மித் ஆடிவருகிறார். 

கிளப் மற்றும் லீக் போட்டிகளில் ஆட வார்னருக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெஸ்ட் இண்டீஸில் நடக்க உள்ள கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் வார்னர் ஆட உள்ளார். செயிண்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிக்காக ஆட வார்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 

click me!