பதிவு செய்யப்படாத பத்திரங்களின் விளம்பரம், விற்பனை ஆகியவற்றில் பங்கேற்றதாக கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போர்ச்சுகீசிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல் நாஸ்ரின் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் பைனான்ஸை ஊக்குவித்ததைத் தொடர்ந்து தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக மைக்கேல் சைஸ்மோர், மைக்கி வோங்டாரா மற்றும் கோர்டன் லூயிஸ் ஆகியோர் குற்றம் சாட்டினர். இதையடுத்து அவர் மீது அமெரிக்காவின் புளோரிடா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ரொனால்டோ 'Binance உடன் ஒருங்கிணைத்து பதிவு செய்யப்படாத பத்திரங்களின் சலுகை மற்றும் விற்பனையில் தீவிரமாக பங்கேற்றார். ரொனால்டோ கடந்த ஆண்டு ஜூன் மாதம் பினான்ஸ் உடன் ஒப்பந்தம் செய்தார். இந்த ஒப்பந்தமானது, NFT களை விளம்பரப்படுத்துவதாக இருந்தது. NFT என்பது பிளாக்செயினில் பதிவு செய்யப்பட்ட ஒரு தனித்துவமான டிஜிட்டல் அடையாளங் காட்டியாகும், மேலும் இது உரிமையையும் நம்பகத்தன்மையையும் சான்றளிக்கப் பயன்படுகிறது. அதை நகலெடுக்கவோ, மாற்றவோ, பிரிக்கவோ முடியாது.
38 வயதான ரொனால்டோ வளர்ச்சி மற்றும் புகழின் காரணமாக பினான்ஸின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளார். ரொனால்டோவின் NFTகள் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதில் மிகவும் வெற்றியடைந்ததாக புகார் கூறுகிறது, இது Binance க்கான தேடல்களில் 500 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (எஸ்இசி) வழிகாட்டுதலில் உள்ள கிரிப்டோகரன்சிகளை ஊக்குவிப்பதற்காக பெறப்பட்ட கட்டணங்களை வெளியிட ரொனால்டோ பதிலளிக்கவில்லை என்றும் புகார் கூறுகிறது. ரொனால்டோவுக்கு ‘பதிவு செய்யப்படாத கிரிப்டோ பத்திரங்களை விற்கும் பைனான்ஸ்’பற்றி ரொனால்டோ அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் கால்பந்து வீரருக்கு ‘முதலீட்டு அனுபவம் மற்றும் வெளி ஆலோசகர்களைப் பெறுவதற்கான பரந்த வளங்கள்’ உள்ளன.
இதற்கிடையில், முன்னாள் Binance CEO சாங்க்பெங் ஜாவோ, உலகளாவிய கிரிப்டோகரன்சி பணமோசடி குற்றத்தை ஒப்புக் கொண்டார். பினான்ஸ் பணமோசடி தடுப்பு மற்றும் பொருளாதாரத் தடைச் சட்டங்களை மீறியதாகவும், ஹமாஸ், அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு ஈராக் மற்றும் சிரியா உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்கள் என அமெரிக்கா விவரிக்கும் அமைப்புகளுடன் 100,000 சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைப் புகாரளிக்கத் தவறியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அவர் மீதான குற்றத்திற்காக அந்த நிறுவனம் $4.3 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்த ஒப்புக்கொண்டது. ஜாவோ US கமாடிட்டி ஃபியூச்சர்ஸ் டிரேடிங் கமிஷனுக்கு $150 மில்லியன் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டார். ஜாவோ தற்போதைக்கு அமெரிக்காவை விட்டு வெளியேற முடியாது என்று அமெரிக்க பெடரல் நீதிபதி கடந்த திங்களன்று கூறினார். சியாட்டில் நீதிமன்றம் வரும் பிப்ரவரி மாதம் ஜாவோவின், தண்டனையை விசாரணையின் மூலம் நீடிக்க வேண்டுமா அல்லது அவர் குடிமகனாக இருக்கும் USE க்கு திரும்ப அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதை பரிசீலிக்கும் வரை அவர் அமெரிக்காவில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.