
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. நேற்றைய (ஜூலை29) முதல் நாளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினர்.
பாக்ஸிங், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடினர். குறிப்பாக நீச்சல் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் அபாரமாக விளையாடி ஃபைனலுக்கு முன்னேறினார். 100மீ பேக் ஸ்ட்ரோக் நீச்சலில் ஃபைனலுக்கு முன்னேறினார் ஸ்ரீஹரி நடராஜ்.
காமன்வெல்த் போட்டிகளின் 2ம் நாளான இன்றைய தினம், இந்திய வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்ளும் போட்டிகளின் விவரங்களை பார்ப்போம்.
இதையும் படிங்க - காமன்வெல்த் நீச்சல் போட்டி: இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ்
1:00 PM: லான் பௌல்ஸ் - இந்தியா ஆடவர் டிரிபிள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் டானியா சௌத்ரி
1:30 PM: தடகளம் - நீதேந்திர சிங் ராவத் - ஆடவர் மாரத்தான் ஃபைனல்
1:30 PM: பேட்மிங்டன் - இந்தியா கலப்பு அணி vs இலங்கை (க்ரூப் ஏ)
1:30 PM: பளுதூக்குதல் - சங்கேத் மகாதேவ் சர்கார் (ஆடவர் 55 கிலோ எடைப்பிரிவு) மற்றும் குருராஜா (ஆடவர் 61 கிலோ எடைப்பிரிவு)
2:00 PM: டேபிள் டென்னிஸ் - இந்தியா vs கயானா மகளிர் க்ரூப் 2 போட்டி. இந்திய ஆடவர் அணி vs வட அயர்லாந்து
2:30 PM: சைக்கிளிங் மயூரி லூட் மற்றும் மகளிர் ஸ்பிரிண்ட் தகுதிப்போட்டியில் ட்ரியாஷி பால்
2:30 PM: சைக்கிளிங் - மகளிர் 3000மீ மகளிர் Individual pursuit தகுதிப்போட்டி
2:30 PM: சைக்கிளிங் - ஆடவர் 4000மீ Individual Pursuit தகுதிப்போட்டி - விஷ்வஜீத் சிங் மற்றும் தினேஷ் குமார்
3:00 PM: நீச்சல் 200மீ ஃப்ரீஸ்டைல் ஹீட் 3 - குஷக்ரா ராவத்
4:30 PM: பாக்ஸிங் 54-57 கிலோ எடைப்பிரிவு (Round of 32) ஹுசான்முதீன் முகமது (இந்தியா) vs அம்ஜோலி (தென்னாப்பிரிக்கா)
4:30 PM: ஸ்குவாஷ் (ஆடவர் ஒற்றையர்)- ராமித் டண்டான் மற்றும் சௌரவ் கோஷல்
ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் - ஜோஷ்னா சின்னப்பா மற்றும் சுனைனா சாரா குருவில்லா
இதையும் படிங்க - TNPL 2022: ஷாருக்கான் அதிரடி அரைசதம்.. மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது லைகா கோவை கிங்ஸ்
8:00 PM: பளுதூக்குதல் மகளிர் 49 கிலோ எடைப்பிரிவு - மீராபாய் சானு
8:30 PM: சைக்கிளிங் ஆடவர் கெய்ரின் முதல் சுற்று - எசோ ஆல்பென்
8:30 PM: ஆடவர் டேபிள் டென்னிஸ் காலிறுதி - இந்தியா vs வட ஐலாந்து
9:00 PM: ஜிம்னாஸ்டிக்ஸ் - மகளிர் ஃபைனல் - பிரனதி நாயக், ருதுஜா நடராஜ், ப்ரதிஷ்டா சமந்தா
11:00 PM: பாக்ஸிங் மகளிர் 70 கிலோ எடைப்பிரிவு முதல் சுற்று - லவ்லினா பார்கொஹைன் (இந்தியா) vs என் ஆரியன்
11:30 PM: பேட்மிண்டன் - இந்திய கலப்பு அணி vs ஆஸ்திரேலியா (க்ரூப் ஏ போட்டி)
11:30 PM: ஹாக்கி - இந்தியா vs வேல்ஸ்
1:15 AM: பாக்ஸிங் ஆடவர் 92 கிலோ எடைப்பிரிவு - சஞ்சீத் (இந்தியா) vs அடோ லியூ (முதல் சுற்று)
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.