காமன்வெல்த் வாள்வித்தை போட்டி.. தங்கம் வென்றார் பவானி தேவி

By vinoth kumarFirst Published Aug 10, 2022, 10:35 AM IST
Highlights

காமன்வெல்த் வாள்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் சேபர் பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றார். ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை 15-10 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பவானி தேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க;- செஸ் ஒலிம்பியாட்: குகேஷ், நிஹால் சரினுக்கு தங்கம்! வெள்ளி,வெண்கல பதக்கங்களை குவித்த இந்திய வீரர், வீராங்கனைகள்

இதையடுத்து தற்போது லண்டனில் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் சீனியர் வாள்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி கலந்துகொண்டார். இவர் ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை எதிர்கொண்டார்.

இந்த வாள்போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை 15-10 என்ற புள்ளி கணக்கில் அவரை வீழ்த்தி இந்திய வீராங்கனை பவானி தேவி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க;- காமன்வெல்த் பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார்

click me!