
அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற பகுதியில் நடந்த செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் டை பிரேக்கர் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்து வெளியேறினார். இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன், 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரும், சென்னையை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா களம் கண்டார்.
ஆசிய கோப்பை 2023 முதல் போட்டியில் பாகிஸ்தான் – நேபாள் பலப்பரீட்சை!
முதல் இரண்டு ஆட்டங்கள் டிராவில் முடிந்ததால், வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதற்கன டை பிரேக்கர் ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சனும், பிரக்ஞானந்தாவும் மோதினர். ரேபிட் முறையில் நடைபெற்ற இரண்டு ஆட்டத்தின் முடிவில், உலகக் கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சன் வென்றார். அவருக்கு மிகப்பெரும் சவால் கொடுத்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்தார். உலக ஜாம்பவான்களுடன் மோதி இறுதிப் போட்டி வரை களம் கண்டு போராடி தோல்வியடைந்த பிரக்ஞானந்தாவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த பலரும், மஹிந்திராவின் தார் காரை பிரக்ஞானந்தாவுக்கு பரிசளிக்கலாம் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்.யூ.வி 400 இ.வி காரை, பரிசாக அளிக்கவுள்ளதாக பிரபல தொழிலதிபரும், மஹிந்திரா குழும தலைவருமான ஆனந்த் மஹிந்திரா அறிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னை வந்த பிரக்ஞானந்தாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் வந்த பிரக்ஞானந்தாவிற்கு மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தன்னை வரவேற்க இத்தனை பேர் வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்தது உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று கூறியுள்ளார். இதையடுத்து தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி, அவரிடம் வாழ்த்து பெற்றுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.