செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகளின் 10வது சுற்று போட்டி முடிவுகள்.! பிரக்ஞானந்தா வெற்றி.. குகேஷ் முதல் தோல்வி

By karthikeyan VFirst Published Aug 8, 2022, 9:36 PM IST
Highlights

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணிகளின் 10வது சுற்று போட்டி முடிவுகளை பார்ப்போம்.
 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்துவருகிறது. கடந்த ஜூலை 29ம் தேதி முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடந்துவருகின்றன. ஆகஸ்ட் 9 உடன் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முடிகின்றன. 10ம் தேதி நிறைவு விழா நடக்கிறது.

இன்று 10வது சுற்று போட்டிகள் நடந்தன. 10வது சுற்று ஓபன் பிரிவில் ஈரானை வீழ்த்தி இந்தியா ஏ அணி வெற்றி பெற்றது. உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் ஸ்லோவேக்கியாவை எதிர்கொண்ட இந்தியாவின் பி மற்றும் சி அணிகள் போட்டியை டிரா தான் செய்தன. இந்தியா பி, சி அணிகளால் வெற்றி பெறமுடியவில்லை.

இதையும் படிங்க - காமன்வெல்த் போட்டிகள்: இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வென்ற மொத்த பதக்கங்களின் பட்டியல்..!

மகளிர்  பிரிவில் இந்தியா ஏ, பி, சி ஆகிய 3 அணிகளுமே 10வது சுற்றில் வெற்றி பெற்று அசத்தின. இந்தியா ஏ அணி கஜகஸ்தானையும், இந்தியா பி  அணி நெதர்லாந்தையும், இந்தியா சி அணி ஸ்வீடனையும் வீழ்த்தி வெற்றி பெற்றன.

செஸ் ஒலிம்பியாடில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்றுவந்த தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரரான குகேஷ், 10வது சுற்றில் முதல் தோல்வியை சந்தித்தார். இந்தியா பி அணியில் ஆடிய குகேஷ், உஸ்பெஸ்கிஸ்தான் வீரர் நோடிர்பெக்கிடம் தோல்வியடைந்தார்.

அதே பி அணியில் ஆடிய மற்றொரு தமிழக வீரரான பிரக்ஞானந்தா, உஸ்பெஸ்கிஸ்தான் வீரரை 77வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார். ஆனால் இந்தியா பி அணி போட்டியை டிரா தான் செய்தது. இந்தியா ஏ அணி தான் வெற்றி பெற்றது. 

இந்தியா மகளிர் பி அணியில் பத்மினி ரூட், மேரி அன் கம்ஸ் மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகிய மூவருமே வெற்றி பெற்றனர். வந்திகா மட்டுமே தோல்வியடைந்தார். ஆனால் மூன்று பேர் ஜெயித்ததால் இந்தியா மகளிர் பி அணி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - ஆசிய கோப்பைக்கான இந்திய அணி..! ஆகாஷ் சோப்ராவின் அணியில் 2 அதிரடி வீரர்களுக்கு இடம் இல்லை

இந்தியா சி அணியில் தமிழகத்தை சேர்ந்த நந்திதா, பிரத்யுஷா ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். 10வது சுற்றில் இந்தியா மகளிர் அணிகள் அசத்திவிட்டனர்.
 

click me!