காமன்வெல்த் ஹாக்கி ஃபைனலில் வெற்றி பெற்று தங்கம் வென்றது ஆஸ்திரேலியா..! படுதோல்வி அடைந்து வெள்ளி வென்ற இந்தியா

By karthikeyan V  |  First Published Aug 8, 2022, 6:46 PM IST

காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் 7-0 என படுதோல்வி அடைந்த இந்திய அணி தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெள்ளியை வென்றது. அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தங்கம் வென்றது.
 


காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாளான இன்று பேட்மிண்டனில் இந்தியா 3 தங்கம் வென்றது. டேபிள் டென்னிஸில் வெண்கலம் வென்றது.

ஆடவர் ஹாக்கியில் தங்க பதக்கத்திற்கான ஃபைனல் இன்று நடந்தது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிய இந்த போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி மீது ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி கோல் மழை பொழிந்தது. ஆஸ்திரேலிய அணி கோல் மழை பொழிந்த அதேவேளையில், இந்திய அணி ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் திணறியது.

Tap to resize

Latest Videos

தொடர்ச்சியாக கோல்களை அடித்த ஆஸ்திரேலிய அணி 7 கோல்களை அடிக்க, இந்தியா ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதையடுத்து 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று தங்கம் வென்றது ஆஸ்திரேலியா. இந்திய ஹாக்கி அணி வெள்ளி வென்றது.
 

click me!