
44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் கடந்த ஜூலை 29ம் தேதி முதல் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்துவருகிறது. கடைசி சுற்றான 11வது சுற்று இன்று நடந்துவருகிறது. இன்றுடன் போட்டிகள் நிறைவடையும் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நிறைவு விழா நடக்கிறது.
ஓபன் பிரிவில் இந்தியா பி அணியும், மகளிர் பிரிவில் ஏ அணியும் சிறப்பாக ஆடிவந்த நிலையில், இந்தியா சார்பில் இந்த 2 அணிகளும் தான் பதக்கத்தை வெல்லவுள்ளன.
இதையும் படிங்க - இதுவரை நடந்ததிலேயே தமிழகத்தில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் தான் பெஸ்ட் - விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம்
இந்தியா பி அணி இறுதிச்சுற்றில் ஜெர்மனி அணியை எதிர்கொண்டது. ஓபன் பிரிவில் இந்தியா பி அணியில் இடம்பெற்றிருந்த ரோனக் சத்வானி மற்றும் நிஹல் சரின் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா ஆகிய இருவரும் போட்டியை டிரா செய்தனர். இதையடுத்து இந்தியா பி அணி இறுதிச்சுற்றில் ஜெர்மனி அணியை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தது.
இதையும் படிங்க - காமன்வெல்த் போட்டிகள்: இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வென்ற மொத்த பதக்கங்களின் பட்டியல்..!
மகளிர் பிரிவில் இந்தியா மகளிர் ஏ அணியும் பதக்கத்தை வெல்வது உறுதி. ஆனால் 10 சுற்றுகளின் முடிவில் முதலிடத்தில் இருந்துவந்த மகளிர் ஏ அணி இறுதிச்சுற்றில் அமெரிக்காவிடம் தோற்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.