இவர் மனுசனா இல்ல ஸ்பைடர் மேனா! ஃபிலிப்ஸின் நம்பமுடியாத கேட்ச்! விக்கித்துப் போன விராட் கோலி!

Published : Mar 02, 2025, 04:03 PM ISTUpdated : Mar 02, 2025, 06:28 PM IST
இவர் மனுசனா இல்ல ஸ்பைடர் மேனா! ஃபிலிப்ஸின் நம்பமுடியாத கேட்ச்! விக்கித்துப் போன விராட் கோலி!

சுருக்கம்

28 வயதான கிளென் ஃபிலிப்ஸ் இப்போது உலகின் நம்பர் 1 பீல்டராக உள்ளார். இவர் இப்படி அட்டகாசமான கேட்ச் பிடிப்பது இது முதன்முறை அல்ல. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முகமது ரிஸ்வான் அடித்த பந்தை இப்படி அந்தரத்தில் பாய்ந்து கேட்ச் பிடித்து அசத்தியிருந்தார். 

இந்தியா-நியூசிலாந்து போட்டி (India vs New Zealand)

சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி தனது 300வது ஓடிஐயில் 11 ரன்னில் அவுட் ஆனார். கிளென் ஃபிலிப்ஸின் நம்பமுடியாத கேட்ச்சில் அவர் ஆட்டமிழந்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடர் துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் துபாய் சர்வதேச மைதானத்தில் விளையாடி வருகின்றன. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மிட்ச்செல் சான்ட்னர் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இளம் வீரர் சுப்மன் கில் வெறும் 2 ரன்னில் மேட் ஹென்ரி பந்தில் எல்.பி.டபிள்யூ பந்தில் அவுட் ஆனார். ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்னில் ஜேமிசனின் ஷார்ட் பிட்ச் பந்தில் கேட்ச் ஆனார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி (Virat Kohli) களம் புகுநதார். 

கிளென் ஃபிலிப்ஸ் அட்டகாசமான கேட்ச்

இது விராட் கோலியின் 300வது ஒருநாள் போட்டி என்பதால் அவர் மைதானத்தில் களமிறங்கியபோது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.ஆனால் ரசிகர்களின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. இரண்டு பவுண்டரிகள் விளாசிய விராட் கோலி மேட் ஹென்ரி வீசிய பந்தில் கிளென் ஃபிலிப்ஸின் (Glenn Phillips) நம்ப முடியாத கேட்ச்சில் வெறும் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அதாவது ஹென்ரி வீசிய அவுட் சைட் ஆப் பந்தை விராட் கோலி பாயிண்ட் திசையில் பலமாக அடிக்க அங்கு பீல்டிங் செய்து கொண்டிருந்த கிளென் ஃபிலிப்ஸ் அப்படியே ஸ்பைடர் மேன் போன்று அந்தரத்தில் பாய்ந்து கேட்ச் பிடித்தார். 

'நீங்கள் நல்ல அணியாக இருந்தால்..' இந்தியாவுக்கு சவால் விடுத்த பாகிஸ்தான்! என்ன விஷயம்?

விராட் கோலி வேகமாக அடித்த பந்தை தடுத்து நிறுத்துவதே கஷ்டம். ஆனால் ஃபிலிப்ஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து ஒற்றைக்கையால் கேட்ச் பிடித்து அசத்தினார். ஃபிலிப்ஸ் கேட்ச் பிடித்ததை பார்த்த விராட் கோலி 'யாரு சாமி இவன்' என்பதுபோல் ஒரு நிமிடம் அப்படியே களத்தில் உறைந்தபோய் நின்றார். இந்திய ரசிகர்களும் அப்படியே ஷாக் ஆனார்கள். 

உலகின் நம்பர் 1 பீல்டர் 

28 வயதான கிளென் ஃபிலிப்ஸ் இப்போது உலகின் நம்பர் 1 பீல்டராக உள்ளார். இவர் இப்படி அட்டகாசமான கேட்ச் பிடிப்பது இது முதன்முறை அல்ல. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முகமது ரிஸ்வான் அடித்த பந்தை இப்படி அந்தரத்தில் பாய்ந்து கேட்ச் பிடித்து அசத்தியிருந்தார் கிளென் ஃபிலிப்ஸ். நியூசிலாந்து அணியை பொறுத்தவரை பீல்டிங்கில் நம்பர் ஒன் அணியாக உள்ளனர். இதில் ஃபிலிப்ஸ் முதல் இடத்தில் இருக்கிறார்.

விராட் கோலி அடித்த பந்தை ஃபிலிப்ஸ் பாய்ந்து கேட்ச் பிடித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப்பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், ''யாரு மனுசனா இல்ல ஸ்பைடர் மேனா'' என்று புகழந்து தள்ளி வருகின்றனர். 

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதியில் நுழைந்தது தென்னாப்பிரிக்கா! இந்தியா யாருடன் மோதுகிறது?

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?