
சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. தமிழாடு வீரர் வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றுள்ளார். பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா நியூசிலாந்து போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி விட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். இதனால் இந்திய அணி பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியை பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு சிறிய காய பிரச்சனையுடன் போராடிய கேப்டன் ரோகித் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியானது. ஆனால் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடுகிறார். இதேபோல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கால் வலியால் அவதிப்பட்ட முகமது ஷமி விளையாடுவதும் கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் இன்றைய போட்டியில் முகமது ஷமி விளையாடுகிறார்.
'நீங்கள் நல்ல அணியாக இருந்தால்..' இந்தியாவுக்கு சவால் விடுத்த பாகிஸ்தான்! என்ன விஷயம்?
இதேபோல் ரிஷப் பண்ட் விளையாடுவார் என கருதப்பட்ட நிலையில், அவரும் விளையாடவில்லை. அதே வேளையில் இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றுள்ளார். ஹர்சித் ராணா வெளியே உட்கார வைக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், மற்றும் முகமது ஷமி.
ரோகித் சர்மா, சுப்மன் கில்லும் வழக்கம்போல் ஒப்பனிங்கில் களமிறங்க உள்ளனர். விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் விளையாட உள்ளனர். அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி என 4 சுழற்பந்து வீச்சாளர்கள் களம் காண உள்ளனர்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டேரில் மிட்ச்செல் இடம்பெற்றுள்ளார். டேவான் கான்வே நீக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணி பிளேயிங் லெவன்: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), வில் யங், டேரில் மிட்ச்செல், கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓ'ரூர்க்.
சாம்பியன்ஸ் டிராபியில் குழப்பம்! அரையிறுதி எங்கே? ஆஸி, தென்னாப்பிரிக்கா துபாய் பயணம்!
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.