சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி…பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி..124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி….

 
Published : Jun 05, 2017, 06:54 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி…பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி..124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி….

சுருக்கம்

champions criket...India beat pakistan

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 124  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடினர்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் ஜூன் 1 முதல் 18 வரை நடைபெறுகிறது.

இத்தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நேற்று நடைபெற்று நடைபெற்றது. . பிர்மிங்ஹாமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற  இந்த ஆட்டத்தைப் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களுடன் நடிகர் தனுஷ், விஜய் மல்லையா உள்ளிட்டோர்  கண்டு ரசித்தனர்.


இப்போட்டியிங் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 319 ரன்கள் குவித்தது. பின் டக்வொர்த் லீவிஸ் முறையில் 41 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 164 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் பறிகொடுத்து பரிதாபமாக தோற்றது.

124 ரன்கள் விதிதியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி மீண்டும் பாகிஸ்தான் அணியை மண்ணைக் கவ்வ வைத்தது.

அதிரடியாக விளையாடிய யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது .

இந்த வெற்றியை இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!