
காயம் காரணமாக சாம்பியன் டிராபி போட்டியில் இருந்து இங்கிலாந்து வீரர் வோக்ஸ் விலகினார்.
மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நேற்றுத் தொடங்கியதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கை, வங்கதேசம் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
இப்போட்டியின் முதல் ஆட்டத்தில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை துவம்சம் செய்து முதல் வெற்றியை அடைந்தது இங்கிலாந்து.
இந்த நிலையில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து அணியிலிருந்து விலகியுள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இடம்பெற்ற வோக்ஸ், காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியிலேயெ வெளியேறினார். அவர் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினார்.
காயத்தின் தன்மையை அறிய ஸ்கேன் எடுத்தபிறகே தெரியும் என்றவர் காயம் தீவிரமாக இருப்பதால் சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலிருந்து விலகுவதால் தெரிவித்தார் வோக்ஸ்.
தற்போது இவருக்குப் பதிலாக ஸ்டீவன் ஃபின் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.