விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லஸ் அல்காரஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
கடந்த 3 ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடர் தொடங்கி நேற்று வரை நடந்தது. இதில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த மார்க்கெட்டா வோட்ரூசோவா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
6 தங்கம், 12 வெள்ளி மற்றும் 9 வெண்கலத்துடன் 3ஆவது இடம் பிடித்த இந்தியா!
ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் பிரிட்டனின் ஸ்கூப்ஸ்கி, நெதர்லாந்தின் கூல்காஃப் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர். இந்த நிலையில், நேற்று உலகமே எதிரபார்த்து காத்திருந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடந்தது. இதில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லஸ் அல்காரஸ் மற்றும் செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் இருவரும் மோதினர்.
பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியின் முதல் செட்டை ஜோகோவிச் 6-1 என்று கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அல்காரஸ் 2ஆவது செட்டை 7-6 என்று கைப்பற்றிய நிலையில், 3ஆவது செட்டையும் 6-1 என்று வென்றார். இதையடுத்து 4ஆவது செட்டை ஜோகோவிச் 6-3 என்று கைப்பற்றினார்.
"A lifelong dream! You always have to believe! I'm only 20 years old, everything is happening too fast, but I'm very proud of how we work every day" tweets
, 2023 Gentlemen's Singles Champion
pic.twitter.com/vLUFx406AC
இதன் காரணமாக சாம்பியனை தீர்மானிக்கும், கடைசி செட் வரையிலும் போட்டி விறுவிறுப்பாக சென்றது. இதில், கார்லஸ் அல்காரஸ் 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். இதன் மூலமாக 4 முறை விம்பிள்டன் பட்டத்தை தட்டிச் சென்ற ஜோகோவிச் இந்த முறை 20 வயது நிரம்பிய வீரரிடம் பரிதாபமாக தோல்வி அடைந்தார். இதற்கு முன்னதாக ஜோகோவிச் 7 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அதோடு, 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றியிருக்கிறார்.
வரலாற்று சாதனை படைத்த மார்க்கெட்டா வோண்ட்ரூசோவா: முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன்!
முதல் முறையாக சாம்பியனான கார்லஸ் அல்காரஸ் கூறியிருப்பதாவது: ஜோகோவிச்சைப் பார்த்து டென்னிஸ் விளையாட தொடங்கினேன். ஆனால், இன்று அவரையே வீழ்த்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். இது வாழ்நாள் கனவு. எனக்கு 20 வயது தான் ஆகிறது. நீங்கள் நம்ப வேண்டும். எல்லாமே மிக வேகமாக நடக்கிறது. நாங்கள் எப்படி வேலை செய்கிறோம் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். உங்களது அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி என்று கூறினார். விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் 22ஆவது வீரராக கார்லஸ் அல்காரஸ் வெற்றி பெற்றுள்ளார்.
The moment Carlos Alcaraz became Wimbledon champion.
Unforgettable. pic.twitter.com/JkThtKYPpc
இவரைத் தொடர்ந்து பேசிய ஜோகோவிச் கூறியிருப்பதாவது: தோற்க வேண்டிய பல சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டிய நிலையில் தோற்றுவிட்டேன். இதனால் 2ம் சமமாகிவிட்டது என்று கூறினார். கடந்த முறை விம்பிள்டன் டென்னிஸில் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| A new name. A new reign. 🇪🇸, 2023 Gentlemen's Singles champion🏆 triumphs over , 1-6, 7-6(6), 6-1, 3-6, 6-4 in an all-time classic pic.twitter.com/74W1M7JlY0
— ASHOK SAIN (@ASHOKSA86411553)