கோலியின் ஈகோவை சீண்டிப்பார்த்த பும்ரா!! காரணம் இவரா..?

By karthikeyan VFirst Published Dec 29, 2018, 1:02 PM IST
Highlights

கோலியின் கேப்டன்சி ஏற்கனவே கடுமையாக விமர்சிக்கப்படும் நிலையில், அவரை ஈகோவை சீண்டிவிடும் விதமான கருத்தை பும்ரா கூறியுள்ளார். ஆனால் பும்ரா சொல்லியது உண்மைதான் என்பதால் அதை அவர் சொல்லியதுதான் சரி.
 

கோலியின் கேப்டன்சி ஏற்கனவே கடுமையாக விமர்சிக்கப்படும் நிலையில், அவரை ஈகோவை சீண்டிவிடும் விதமான கருத்தை பும்ரா கூறியுள்ளார். ஆனால் பும்ரா சொல்லியது உண்மைதான் என்பதால் அதை அவர் சொல்லியதுதான் சரி.

கோலியின் கேப்டன்சி மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. இந்திய அணி தோல்வியை சந்திக்கும்போதெல்லாம் தூங்கிக்கொண்டிருந்த விமர்சனங்கள் பட்டென எழுந்து கோலியை படுத்தி எடுத்துவிடும். வீரர்களை கையாளும் உத்தி, கள வியூகம், பவுலர்களை பயன்படுத்தும் முறை ஆகியவற்றில் கோலியின் செயல்பாடுகள் சிறப்பானதாக இல்லை. 

இவற்றில் எல்லாமே கோலி இன்னும் அவரை வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதே கருத்தை பல ஜாம்பவான்கள் தெரிவித்துள்ளனர். கோலி தலைசிறந்த வீரர் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லையென்றாலும் அவர் மிகச்சிறந்த கேப்டன் கிடையாது. கேப்டன்சி திறமையை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கவாஸ்கர், மைக்கேல் வான் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இக்கட்டான சூழல்களில் போட்டியின் போக்கு, மைதானத்தின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், பவுலர்களுக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி கேப்டன் வழிநடத்த வேண்டும். தோனியின் அப்படியான சில ஆலோசனைகள் நல்ல பலனை அளித்து திருப்புமுனைகளை ஏற்படுத்தும். 

அப்படியான ஒரு திறமை கோலியிடம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் ரோஹித் சர்மாவிடம் அப்படியான கேப்டன்சி திறமையை பல தருணங்களில் காணமுடியும். பவுலர்களுக்கு அவர் வழங்கும் ஆலோசனைகளும் அவரது கள உத்திகளும் நல்ல முடிவுகளை பெற்றுத்தந்துள்ளன. 

அந்த மாதிரியான சம்பவம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடந்தது. ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணி பும்ராவிடம் சரணடைந்தது. பும்ராவின் வேகத்தை சமாளிக்க முடியாமல் அவரிடம் மட்டுமே 6 விக்கெட்டுகளை இழந்தது. 

அதில் மிகச்சிறந்த மிரட்டலான விக்கெட் என்றால் அது ஷான் மார்ஷின் விக்கெட் தான். மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி பந்தில் ஷான் மார்ஷ் ஆட்டமிழந்தார். பும்ரா வீசிய மிகவும் துல்லியமான அருமையான ஸ்லோ யார்க்கரில் விக்கெட்டை பறிகொடுத்தார் ஷான் மார்ஷ். அந்த பந்தில் அதிர்ந்துபோன மார்ஷ் அதிலிருந்து மீள சில நொடிகள் ஆனது. 

மிகச்சிறந்த அந்த பந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்ததும், அதுகுறித்து பேசிய பும்ரா, ஆடுகளத்தில் எந்தவிதமான தன்மையும் இல்லாததால் பவுலிங் சுத்தமாக எடுபடவில்லை. அந்த நேரத்தில் ஷான் மார்ஷுக்கு ஸ்லோ டெலிவரி ஒன்று போடுமாறு ரோஹித் சர்மா தான் என்னிடம் கூறினார். ரோஹித்தின் ஆலோசனையின்படிதான் ஷான் மார்ஷுக்கு ஸ்லோ யார்க்கர் போட்டேன் என்று பும்ரா தெரிவித்தார். 

ஆடுகளத்தில் எந்தவிதமான சாதகமான சூழலும் இல்லாத நிலையில், ரோஹித் சர்மா சிறந்த ஆலோசனையை கூறியுள்ளார். ஏற்கனவே கோலியின் கேப்டன்சி மீது விமர்சனங்கள் உள்ள நிலையில், ரோஹித் சர்மாவின் கேப்டனுக்கான திறமை நாளுக்கு நாள் வெளிப்பட்டுக்கொண்டே வருகிறது. 
 

click me!