ஆஸி. மண்ணில் சாதித்த முதல் இந்தியர்; கபில்தேவின் 2 சாதனையை தூள் துளாக்கிய பும்ரா; என்ன தெரியுமா?

By Rayar r  |  First Published Dec 29, 2024, 9:05 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மெல்போர்ன் டெஸ்ட்டில் கபில்தேவின் 2 சாதனைகளை பும்ரா முறியடித்துள்ளார், 


பும்ரா என்னும் மேஜிக் மேன் 

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நிதிஷ் குமார் ரெட்டி சூப்பர் சதம் (114 ரன்) விளாசினார். 

Tap to resize

Latest Videos

பின்பு 2வது இன்னிங்சை விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. தனது மாயாஜால அதிவேக பந்துவீச்சால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்து வரும் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். முதல் இன்னிங்சிலும் 4 விக்கெட் வீழ்த்தி இருந்த பும்ரா 4வது டெஸ்ட்டில் இதுவரை 8 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்

இந்த தொடரில் இதுவரை 29 விக்கெட்டுகளை அறுவடை செய்துள்ள பும்ரா, முன்னாள் கேப்டன் கபில்தேவ்வின் இரண்டு சாதனைகளை இன்று தூள் தூளாக நொறுக்கியுள்ளார். அதாவது பும்ரா இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை கடந்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பெற்றார். 

44 டெஸ்டில் 202 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பும்ரா இந்த சாதனையை படைத்துள்ளார். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கபில்தேவ் 50 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்களை எட்டியிந்த நிலையில் பும்ரா அவரது சாதனையை முறியடித்துள்ளார். அதிவேகமாக 200 விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் (37 டெஸ்ட்), ரவீந்திர ஜடேஜா (44 டெஸ்ட்), ஹர்பஜன் சிங் (46 டெஸ்ட்), அனில் கும்பிளே (47 டெஸ்ட்), பி.எஸ் சந்திரசேகர்  (48 டெஸ்ட்) என ஸ்பின் பவுலர்களே முதல் 5 இடத்தில் இருக்கும் நிலையில், பும்ரா முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளராக இந்த சாதனையை எட்டியுள்ளார். 

கபில்தேவின் சாதனை முறியடிப்பு 

மேலும் 44 டெஸ்ட்டில் 200 விக்கெட் வீழ்த்திய ஜடேஜாவின் சாதனையையும் பும்ரா இன்று சமன் செய்துள்ளார். இதேபோல் இருதரப்பு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் பும்ரா இன்று அசால்ட்டாக செய்துள்ளார். 

கபில்தேவ் 1991ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 25 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். பும்ரா இந்த தொடரில் இதுவரை 29 விக்கெடுகள் வீழ்த்தி அந்த சாதனையையும் எளிதில் முறியடித்துள்ளார். இன்னும் ஆஸ்திரேலியாவின் 2வது இன்னிங்ஸ் முடியாத நிலையி, இன்னும் ஒரு டெஸ்ட்டும் பாக்கி இருக்கும் நிலையில், பும்ரா இந்த தொடரில் 40 விக்கெட்டை தொட்டு விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!