ஆஸி. மண்ணில் சிக்சர் மழை; சேவாக் சாதனையை தகர்த்த நிதிஷ் குமார் ரெட்டி; என்ன தெரியுமா?

By Rayar r  |  First Published Dec 28, 2024, 4:50 PM IST

ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய முதல் இந்தியர் என்ற பெருமையை நிதிஷ் குமார் ரெட்டி பெற்றுள்ளார். சேவாக்கின் சாதனையை அவர் தகர்த்தெறிந்துள்ளார். 


நிதிஷ் குமார் ரெட்டியின் முதல் சதம் 

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 221/6 என தடுமாறிய நிலையில், முதல் டெஸ்ட் தொடரில் விளையாடும் நிதிஷ் குமார் ரெட்டி முதல் சதம் விளாசி அணியின் மானத்தை காப்பாற்றியுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

நிதிஷ் குமார் ரெட்டி 105 ரன்களுடன் களத்தில் உள்ளார். இவருக்கு பக்கபலமாக விளங்கிய தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் எடுத்தார். மெல்பர்ன் மைதானத்தில் புதிய வரலாறு படைத்த நிதிஷ் குமார் ரெட்டி பாராட்டு மழையில் நனைந்து வரும் நிலையில், சிக்சர்கள் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

சிக்சர்களில் புது சாதனை 

அதாவது நிதிஷ் குமார் ரெட்டி இந்த தொடரில் இதுவரை 8 சிக்சர்கள் விளாசியுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2003ம் ஆண்டு  எதிரான டெஸ்ட் தொடரில் வீரேந்திர சேவாக் 6 சிக்சர்கள் விளாசி இருந்தார். இதேபோல் கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் முரளி விஜய் 6 சிக்சர்கள் அடித்து இருந்தார்.

இப்போது இந்த 2 பேரின் சாதனையையும் நிதிஷ் குமார் ரெட்டி தகர்த்தெறிந்துள்ளார். பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 79 ரன்கள் அடித்த ரெட்டி, 3 சிக்சர்கள் அடித்து இருந்தார். அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 84 ரன்கள் அடித்த அவர் 4 சிக்சர்கள் பறக்க விட்டு இருந்தார். இப்போது 4வது டெஸ்ட்டில் 1 சிக்சர் அடித்துள்ள ரெட்டி இந்த தொடரில் மொத்தம் 8 சிக்சர்கள் விளாசியுள்ளார். 

மைக்கேல் வாகன் முதலிடம் 

ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் (2002ல் ஆஷஸ் தொடர்), வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் (2010ம் ஆண்டு) ஆகியோர் தலா 8 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளனர். இப்போது இவர்களை சமன் செய்துள்ள நிதிஷ் குமார் ரெட்டி, இந்த போட்டியிலேயே இருவது சாதனையையும் தகர்த்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!