'நீ இன்னும் வளரணும் தம்பி'; தனது பந்தை விளாசிய கான்ஸ்டாஸ் விக்கெட்டை சொல்லி வைத்து எடுத்த பும்ரா!

By Rayar r  |  First Published Dec 29, 2024, 8:26 AM IST

4வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் சாம் கான்ஸ்டாஸ் விக்கெட்டை பும்ரா சொல்லி வைத்து எடுத்தார். முதல் இன்னிங்சில் சாம் கான்ஸ்டாஸ் தனது பந்தை விளாசியதற்கு பும்ரா பழிதீர்த்துக் கொண்டார்.


இந்திய அணி 369 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழந்து 358 ரன்கள் எடுத்திருந்தது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 221/6 என தடுமாறிய நிலையில், முதல் டெஸ்ட் தொடரில் விளையாடும் நிதிஷ் குமார் ரெட்டி முதல் சதம் விளாசி அணியின் மானத்தை காப்பாற்றியுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

நிதிஷ் குமார் ரெட்டி 105 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில், இந்திய அணி இன்று 369 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நிதிஷ் குமார் ரெட்டி 114 ரன்களில் லயன் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் 105 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் பேட்டிங்கை தொடங்கியது. ஆனால் தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சாம் கான்ஸ்டாஸ் விக்கெட் வீழ்த்திய பும்ரா

அந்த அணியின் இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் 8 ரன்னில் பும்ராவின் சூப்பரான இன் ஸ்விங் பந்தில் கிளின் போல்டானார். வழக்கமாக பெரிய விக்கெட் எடுத்தாலும் கொண்டாடமல் அமைதியாக இருக்கும் பும்ரா, சாம் கான்ஸ்டாஸ் விக்கெட் எடுத்ததும் கொண்டாடினார். ஏனெனில் தனது அறிமுக டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் சாம் கான்ஸ்டாஸ் அதிரடி அரைசதம் விளாசி இருந்தார்.

யாருமே எதிர்பார்க்காத வகையில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 65 பந்தில் 60 ரன் எடுத்து அவுட்டாகி இருந்தார். அதிலும் அவர் உலகின் நம்பர் 1 பவுலரான பும்ராவின் பவுலிங்கை அடித்து நொறுக்கியது பேசும்பொருளானது. பும்ரா வீசிய 7வது ஓவரில் 2 பவுண்டரி ஒரு சிக்சர் விளாசிய சாம் கான்ஸ்டாஸ், பும்ராவின் 11வது ஓவரிலும் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் நொறுக்கினார். இதில் ஒரு சிக்சரை அவர் ஸ்கூப் ஷாட் மூலம் அடித்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. 

'தம்பி.. யாருகிட்ட'

இதனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் ''பும்ராவை அடிக்க ஒருவன் வந்து விட்டான்'' என்று சாம் கான்ஸ்டாஸை புகழந்து தள்ளினார்கள். இதனால் சாம் கான்ஸ்டாஸ் 2வது இன்னிங்சில் எப்படி விளையாட போகிறார்? என அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், 'நீ இன்னும் வளரணும் தம்பி' என்பது போல் சாம் கான்ஸ்டாஸ் விக்கெட்டை பும்ரா சொல்லி வைத்து தூக்கியுள்ளார். பும்ரா வீசிய மேஜிக் இன் ஸ்விங் பந்தை சாம் கான்ஸ்டாஸால் தடுக்க கூட முடியவில்லை. பந்து அவரது பேட்டை ஏமாற்றி விட்டு ஸ்டெம்பை பதம் பார்த்தது.

பும்ரா கான்ஸ்டாஸை கிளீன் போல்டாக்கியது இப்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய ரசிகர்களை வறுத்தெடுக்கும் இந்திய ரசிகர்கள், ''நேத்து வந்த சின்ன பையன் கான்ஸ்டாஸ் பும்ராகிட்ட மோதலாமா? பெரிய பெரிய ஜாம்பவான்களே பும்ரா கிட்ட மோதி தோத்துபோய் இருக்காங்க. யாருகிட்ட.. பும்ரா டா'' என்று பல்வேறு கமெண்ட்களை கூறி  ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
 

click me!