#TokyoOlympics இந்தியாவிற்கு 2வது பதக்கத்தை உறுதிசெய்தார் பாக்ஸர் லவ்லினா..! அரையிறுதிக்கு தகுதி

By karthikeyan VFirst Published Jul 30, 2021, 9:45 AM IST
Highlights

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பாக்ஸிங்(64-69 கிலோ) எடைப்பிரிவில் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியாவை சேர்ந்த லவ்லினா, இந்தியாவிற்கு 2வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
 

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பாக்ஸிங் 69 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் லவ்லினா, ஜெர்மனியின் நடைன் அபெட்ஸை எதிர்கொண்டார். அந்த போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய இந்தியாவின் லவ்லினா, 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடந்த காலிறுதி போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் நீன் - சின் சென்னை எதிர்கொண்டார். இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய லவ்லினா, 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம், வெண்கல பதக்கத்தை உறுதி செய்துள்ளார் லவ்லினா. இந்த ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் மீராபாய் சானு மட்டுமே இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்தார். இந்நிலையில், 2வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார் லவ்லினா. அரையிறுதிக்கு முன்னேறிய லவ்லினாவிற்கு வெண்கல பதக்கம் கிடைப்பது உறுதி. அவர் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் வெற்றி பெற்றால் தங்கம் வெல்லலாம். 
 

click me!