IndvsAus:இந்தியா-ஆஸி.டெஸ்ட்| அகமதாபாத் போட்டியை ஆஸ்திரேலியப் பிரதமருடன் சேர்ந்து பார்க்கும் பிரதமர் மோடி

Published : Feb 20, 2023, 05:06 PM IST
IndvsAus:இந்தியா-ஆஸி.டெஸ்ட்| அகமதாபாத்  போட்டியை ஆஸ்திரேலியப் பிரதமருடன் சேர்ந்து பார்க்கும் பிரதமர் மோடி

சுருக்கம்

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வரும் மார்ச் மாதம் இந்தியா வர உள்ளார். அவருடன் சேர்ந்து அகமதாபாத்தில் நடக்கும் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடி பார்க்க உள்ளார்.

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வரும் மார்ச் மாதம் இந்தியா வர உள்ளார். அவருடன் சேர்ந்து அகமதாபாத்தில் நடக்கும் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடி பார்க்க உள்ளார்.

ஆஸ்திரேலியா பிரதமராகிய பின் அந்தோனி அல்பானீஸ் முதல்முறையாக இந்தியாவுக்கு வர உள்ளார். 
இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அணி பயணம் மேற்கொண்டு டெஸ்ட், மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. ஏற்கெனவே இரு டெஸ்ட்போட்டிகள் முடிந்து அதில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. 

குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் - அவசர அவசரமாக நாடு திரும்பிய பேட் கம்மின்ஸ்!

இந்நிலையில் 3வது டெஸ்ட்  போட்டி மார்ச் 1ம் தேதி இந்தூரில் நடக்கிறது. கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் மார்ச் 9ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியை பிரதமர் மோடியும், ஆஸ்திரேலியப் பிரதமரும் இணைந்து பார்க்க உள்ளனர்

இந்தியாவுக்கு மார்ச் 8ம் தேதி ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி வருகை தரஉள்ளார். அப்போது, இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியை இரு தலைவர்களும்  பார்வையிடலாம் எனத் தெரிகிறது. 

இந்தியாவுக்குமுதல்முறையாகப் பயணிக்கும் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ், பிரதமர் மோடியுடன் வர்த்தகம், முதலீடு, தாதுக்கள் ஏற்றுமதி உள்ளிட்டவை குறித்து பேச்சு நடத்த உள்ளார்.
கடந்த வாரக் கடைசியில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஆஸ்திரேலியா சென்று ஆஸ்திரேலிய பிரதமர் வருகையை உறுதி செய்தார்.  

கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் உனக்கு இடம் இல்ல..! மறைமுகமாக சொன்ன பிசிசிஐ

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் ட்விட்டில் பதிவிட்ட செய்தியில் “ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பு அற்புதமாக இருந்தது. அடுத்தமாதம் இந்தியா செல்ல இருக்கிறேன். இருநாட்டு ராஜாங்கரீதியான உறவு, பொருளாதார வாய்ப்புகள், மக்கள் தொடர்புகள் குறி்த்து விவாதிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

3 பார்மேட்டிலும் சதம்.. புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 6வது இந்தியர் ஆனார்
Ind Vs SA: இந்திய அணி மிரட்டல் அடி..! இமாலய வெற்றி.. தொடரை கைப்பற்றி அசத்தல்..