எம் எஸ் தோனியின் மகள் ஜிவாவிற்கு அர்ஜெண்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி தனது ஜெர்ஸியை பரிசாக அளித்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடந்து முடிந்த ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜெண்டினா அணி ஃபெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று 36 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை தட்டிச் சென்றது. இதன் மூலம் லியோனல் மெஸ்ஸி கனவு நனவானது. இந்த நிலையில், கிரிக்கெட்ட் ஜாம்பவானான எம் எஸ் தோனியின் மகள் ஜிவாவிற்கு லியோனல் மெஸ்ஸி ஆச்சரியப்படும் வகையில் பரிசு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அர்ஜெண்டினா ஜெர்ஸியில் கையொப்பமிட்டு லியோனல் மெஸ்ஸி ஜிவாவிற்கு அனுப்பி உள்ளார்.
ஷிகர் தவான் சேப்டர் குளோஸா? இலங்கை தொடரில் நீக்கப்பட்டது ஏன்?
இந்த ஜெர்ஸியை அணிந்து ஜிவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தோனிக்கு கால்பந்து வீரராக வேண்டும் என்பது சிறு வயது ஆசை. அதிலேயும் கோல் கீப்பராக வேண்டும் என்று கனவு இருந்தது. ஆனால், கிரிக்கெட்டில் வலம் வந்தார். கிரிக்கெட்டிலும் அவர் கீப்பர் தான். தோனியைப் போன்று அவரது மகள் ஜிவா தோனி கால்பந்து ரசிகை. அவரது ஆர்வத்தை பாராட்டும் வகையில் மெஸ்ஸி ஜெர்ஸி அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ஹர்திக் பாண்டியா கேப்டன், ரிஷப் பண்ட், ஷிகர் தவான் அணியில் இல்லை!
மெஸ்ஸி அனுப்பி வைத்த புகைப்படத்தை அணிந்து கொண்டு அப்பாவை போல மகளை போல கேப்ஷனுடன் ஜிவா பகிர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் இல்லை: டுவிட்டரில் கருத்து பதிவிட்ட ஹர்ஷா போக்ளே!