இஸ்ரேலுக்கு எதிரான கால்பந்து ஆட்டத்தை ரத்து செய்தது அர்ஜென்டீனா... ஏன்?

First Published Jun 7, 2018, 11:55 AM IST
Highlights
Argentina canceled football match against Israel ... Why?


பாலஸ்தீன ஆதரவு குழுக்களின் ஆர்ப்பாட்டத்தையடுத்து, இஸ்ரேலுக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்த் ஆட்டத்தை ரத்து செய்தது அர்ஜென்டீனா.

ஜெருசலேமின் டெட்டி கொலேக் மைதானத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த இஸ்ரேலுக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டது என்று அர்ஜென்டீன கால்பந்து சம்மேளனம் தெரிவித்தன. 

இஸ்ரேலுடனான ஆட்டத்தை ரத்து செய்யுமாறு, பாலஸ்தீன கால்பந்து சம்மேளன தலைவர் ஜிப்ரில் ரஜெளப் ஆர்ஜென்டீனாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த 1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கத்தின்போது அழிக்கப்பட்ட பாலஸ்தீன கிராமத்தின் அருகே உள்ள மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுவதாக அவர் தெரிவித்து இந்த கோரிக்கையை அர்ஜென்டீனாவிடம் கேட்டுக்கொண்டார். 

பாலஸ்தீன கால்பந்து அணியினருக்கு தடை விதித்துள்ள இஸ்ரேல் கால்பந்து சம்மேளனத்தை நீக்குமாறு ஃபிஃபாவிடம் ஜிப்ரில் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அர்ஜென்டீனா தேசிய அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்த பார்சிலோனா விளையாட்டு வளாகத்தின் வெளியே பாலஸ்தீன ஆதரவு குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தன.

இதனையடுத்து, "இஸ்ரேலுக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தை அர்ஜென்டீனா ரத்து செய்துள்ளது" இந்த முடிவுக்கு அர்ஜென்டீனா வீரர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 

tags
click me!