கோஹ்லியை கதறவிட்ட தினேஷ் கார்த்திக்... அசால்ட் கேட்ச்சை பார்த்து அசந்து போன அனுஷ்கா!

Asianet News Tamil  
Published : Apr 30, 2018, 09:11 AM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
கோஹ்லியை கதறவிட்ட தினேஷ் கார்த்திக்... அசால்ட் கேட்ச்சை பார்த்து அசந்து போன அனுஷ்கா!

சுருக்கம்

Anushka Sharma applauds as husband Virat Kohli wages lone battle vs KKR

பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தாறுமாறு வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டியில் இன்று விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூ அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன் படி பெங்களூரு அணிக்கு துவக்க வீரர்களாக குயின்டான் டி காக், பிராண்டன் மெக்கல்லம் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் எடுத்தது.

டி காக் 29 ஓட்டங்களிலும், மெக்கல்லம் 38 ரன்களிலும், மனன் வோரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இருப்பினும் அணியின் கேப்டனான கோஹ்லி நிதனாமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருக்கு மந்தீப் சிங் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்து ஆடியதால், இந்த ஜோடி 65 ரன்கள் குவித்தது.

மந்தீப் 19 ரன்களில் வெளியேற, கடைசி கட்டத்தில் கோஹ்லி அதிரடி காட்ட என பெங்களூரு அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் எடுத்தது.

பெங்களூரு அணி சார்பில் கோஹ்லி 68 ரன்களும், கிராண்ட்ஹோம் 11 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணி சார்பில் ஆண்ட்ரூ ரஸ்ஸெல் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர். கொல்கத்தா அணி 6.3 ஓவரில் 55 ரன் எடுத்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

அணியின் எண்ணிக்கை 59 ஆக இருக்கும்போது சுனில் நரேன் 27 ரன்களில் அவுட்டானார். அடுத்து ஆடிய உத்தப்பா 21 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரியுடன் 36 ரன் எடுத்து அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 108 ஆக இருந்தது. நிதிஷ் ரானா 15 ரன் எடுத்தபோது காயத்தால் பெவிலியன் திரும்பினார். அடுத்து ஆடிய ஆண்ட்ரூ ரஸ்ஸெல் டக் அவுட்டானார். தினேஷ் கார்த்திக் 23 ரன்களில் அவுட்டானார்.

இறுதியாக கொல்கத்தா அணி 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிறிஸ் லின் 62 மற்றும் ஷுப்மன் கில் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர். பெங்களூரு அணி சார்பில் முருகன் அஷ்வின், மொகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இப்போட்டியில் பெங்களூ அணியில் கோஹ்லியை தவிர மற்ற வீரர்களிடம் ஆக்ரோசமான ஆட்டத்தை பார்க்க முடியவில்லை. போட்டியின் 18.5 ஓவரின் போது தினேஷ் கார்த்திக் அடித்த பந்தை கோஹ்லி அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தினார். இந்த கேட்சைப் பார்த்த அனுஷ்கா சர்மா வியந்து பார்த்து கைதட்டி கோஹ்லியை உற்சாகப்படுத்தினார்.

மேலும், இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணி 2 வெற்றி 5 தோல்விகளுடன் 7-வது இடத்தையும், கொல்கத்தா அணி 4 வெற்றி 4 தோல்வி என நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

T20 உலகக்கோப்பை: ஸ்ட்ராங் டீம் களமிறக்கிய ஆஸ்திரேலியா.. கம்மின்ஸ் விலகல்.. கேப்டன் யார்?
டி20 உலகக் கோப்பைக்காக ஹெய்சன்பெர்க் - அனிருத் கூட்டணியில் உருவான அடிபொலி பாடல்