எப்போதுமே அவர் மேட்ச் வின்னர் தான்.. வீரர்களை விட்டுக்கொடுக்காத சூப்பர் கேப்டன்

 
Published : Apr 29, 2018, 04:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
எப்போதுமே அவர் மேட்ச் வின்னர் தான்.. வீரர்களை விட்டுக்கொடுக்காத சூப்பர் கேப்டன்

சுருக்கம்

rohit opinion about pollard

பொல்லார்டு இப்போதும் மேட்ச் வின்னர் தான் என பொல்லார்டை விட்டுக்கொடுக்காமல் பேசியுள்ளார் ரோஹித் சர்மா.

ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளுக்கு பிறகு நேற்றைய சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு சாம்பியனான மும்பை அணி, 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று மோசமான நிலையில் இருந்தது. நேற்றைய சென்னை அணிக்கு எதிரான வெற்றி, அந்த அணிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.

தொடர்ந்து ஃபார்மில் இல்லாமல் தவித்துவரும் பொல்லார்டுக்கு பதிலாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டுமினி சேர்க்கப்பட்டார். இப்போது ஃபார்ம் இல்லாமல் தவித்துவரும் பொல்லார்டு, இதற்கு முந்தைய பல சீசன்களில் பல போட்டிகளில் மும்பை அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தவர். கடைசி நேரத்தில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கலக்கி வெற்றியை தேடித்தரக்கூடியவர்.

இந்நிலையில், சென்னை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு பேசிய மும்பை கேப்டன் ரோஹித், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே சிறப்பாக செயல்பட்டோம். இந்த வெற்றி இப்போது கண்டிப்பாக தேவையானது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியை தவிர மற்ற போட்டிகளில் போராடி வெற்றியின் விளிம்பில் தான் தோற்றோம். ஹைதராபாத் அணியுடன் மட்டும்தான் பேட்டிங் சரியாக ஆடவில்லை. பொல்லார்டை இந்த ஆட்டத்தில் நீக்கியது கடினமானதுதான். கடந்த காலங்களில் மும்பை அணியின் வெற்றிக்கு பெரிய பங்காற்றியிருக்கிறார். அவர் இப்போதும் எங்களது மேட்ச் வின்னர்தான். அவரை நிரந்தரமாக நீக்க விரும்பவில்லை. இந்த போட்டியில் அவர் நீக்கப்பட்டதை அவர் பாசிட்டிவாக எடுத்துக்கொள்வார். அணியின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவை தொழில்முறை கிரிக்கெட்டரான அவர் புரிந்துகொண்டுள்ளார். 

அதேபோல எந்தவீரரையும் நீக்க வேண்டும் என்றோ ஒதுக்க வேண்டும் என்றோ நினைக்கவில்லை. அணியின் நலனுக்காக சில முடிவுகள் எடுக்கப்படும். அதை வீரர்கள் புரிந்துகொள்வார்கள் என பேசினார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!
T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு