சத்தமில்லாமல் தோனி எட்டிய மற்றொரு மைல்கல்

 
Published : Apr 29, 2018, 02:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
சத்தமில்லாமல் தோனி எட்டிய மற்றொரு மைல்கல்

சுருக்கம்

dhoni reached new milestone in ipl

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தோனி செய்துள்ளார்.  மூன்றுவிதமான ஐசிசி சாம்பியன்சிப்பையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் தோனி.

சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சாதனைகளை புரிந்துள்ளார்.

தற்போது ஐபிஎல் கேப்டனாக தோனி, புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதுவரை நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 10 சீசன்களில் 8 சீசனில் சென்னை அணிக்கும் ஒரு தொடரில் புனே அணிக்கும் கேப்டனாக செயல்பட்டுள்ளார். சென்னை அணிக்கு 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

இரண்டு ஆண்டு கால தடைக்கு பிறகு இந்த சீசனில் கலந்துகொண்டு சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தமுறையும் தோனி தான் கேப்டன். தோனியின் கேப்டன்சியில் 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை அணியின் கேப்டன் தோனி, நேற்றைய மும்பைக்கு எதிரான போட்டிக்கு கேப்டன்சி செய்ததன் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். நேற்றைய போட்டிக்கு ஐபிஎல் தொடரில் தோனிக்கு கேப்டனாக 150வது போட்டி. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 150 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!
அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!