இஷான் கிஷானுக்கு விக்கெட் கீப்பிங் டிப்ஸ் கொடுக்கும் தோனி!! வலைதளங்களில் வைரல்

 
Published : Apr 29, 2018, 01:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
இஷான் கிஷானுக்கு விக்கெட் கீப்பிங் டிப்ஸ் கொடுக்கும் தோனி!! வலைதளங்களில் வைரல்

சுருக்கம்

dhoni gave wicket keeping tips to ishan kishan

மும்பை அணியின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷானுக்கு தோனி கீப்பிங் சொல்லி கொடுக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சிறந்த கேப்டன், அதிரடி பேட்ஸ்மேன் என்பதையெல்லாம் கடந்து தோனி, ஒரு மிகச்சிறந்த விக்கெட் கீப்பர். பேட்டிங்கிலும் கேப்டனாகவும் மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் பல்வேறு சாதனைகள் புரிந்தவர் தோனி. 

அதிவேகம், சமயோசித சிந்தனை ஆகியவற்றால் ஸ்டம்பிங் மற்றும் ரன் அவுட்களை செய்து ரசிகர்களை மட்டுமல்லாது வீரர்களையும் மிரட்டிவிடுவார். சர்வதேச அளவில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர் தோனி. இளம் வீரர்களுக்கு விளையாட்டு நுணுக்கங்களை சொல்லி கொடுப்பதில் தோனிக்கு அளாதி பிரியம்.

இளம் வீரர்களுக்கு நுணுக்கங்களை கற்றுக்கொடுத்து வளர்த்தெடுக்க விரும்புபவர் தோனி. எதிரணி என்பதையெல்லாம் கடந்து தனது அனுபவத்திலிருந்து கற்ற அனைத்தையும் சொல்லி கொடுப்பார்.

நேற்றைய மும்பைக்கு எதிரான போட்டியிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. இஷான் கிஷானுக்கு தோனி விக்கெட் கீப்பிங் சொல்லி கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே புனேவில் நடந்த போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் சென்னை அணியின் பேட்டிங்கின்போது, தோனியை ஸ்டம்பிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மும்பை அணியின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் பந்தை ஸ்டம்பிங் செய்வதற்குள் வேகமாக கிரீஸுக்குள் தோனி வந்துவிட்டார்.

இதையடுத்து ஆட்டம் முடிந்ததும் இஷான் கிஷானுக்கு விக்கெட் கீப்பிங் நுணுக்கங்களை தோனி கற்றுக்கொடுத்தார். அந்த புகைப்படம் வைரலாக பரவிவருகிறது. தோனி, இஷான் கிஷான் இருவருமே ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!