
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியதை அடுத்து, அணியினரையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் விதமாக ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் போட்டுள்ளார்.
கடந்த 10 ஐபிஎல் சீசன்களில் மும்பை அணிக்காக ஆடிவந்த ஹர்பஜன் சிங், இந்த சீசனில் தோனி தலைமையிலான சென்னை அணியில் ஆடிவருகிறார். சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டதிலிருந்தே ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகிய இருவரும் அட்மின்கள் மூலமாக தமிழில் டுவீட் போட்டு அசத்திவருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய மும்பைக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியதிலிருந்து விரைந்து மீண்டு வந்து வெற்றி பெறுவோம் என்ற வகையில், ஹர்பஜன் சிங் டுவீட் போட்டுள்ளார்.
அந்த டுவீட்டில், தோல்வி என்னும் அடி சறுக்கியது. ஆனால் நாம் யானை போல் எழுவதற்கு நேரம் பிடிக்கப்போவதில்லை. குதிரையை போல மும்மடங்கு வேகத்தில் ஓட தயாராக உள்ளோம். தோல்வியின் பாடம் என் வெற்றியை அழகாக்கும் என பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.