பிரிஜ் பூஷன் சரண் சிங் 4 வாரங்களுக்கு பதவி விலகல்: மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் வாபஸ்!

By Rsiva kumarFirst Published Jan 21, 2023, 11:10 AM IST
Highlights

மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் கோரிக்கைகளை மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஏற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து 3 நாட்களாக நடந்து வந்த மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
 

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் சரண் சிங், இருந்து வருகிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத்தை பிரிஜ் பூஷன் சரண் சிங் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.  இதனால், வினேஷ் போகத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஆட்டைய போட்ட மோசடி கும்பல்: ஐசிசியிடமிருந்து ஆன்லைன் மூலமாக ரூ.20 கோடி அபேஸ்!

இதையடுத்து வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், அன்ஷு மாலிக், ரவி தஹியா உள்ளிட்ட 30 மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மல்யுத்த சம்மேளன தலைவர் மட்டுமின்றி நிர்வாகிகள், பயிற்சியாளர்களும் வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பிரிஜ் பூஷன் சரண் சிங் தனது தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும், புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 3 நாட்களாக இந்த போராட்டம் நடந்து வந்தது.

நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா? காவ்யா மாறனிடம் கேட்ட தென் ஆப்பிரிக்கா ரசிகர்!

இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாஜக எம்பியும், மல்யுத்த கூட்டமைப்பு தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் இது தொடர்பான பொய்யான புகார்களுக்கு எல்லாம் பதவி விலக முடியாது என்றும், தான் வாயைத் திறந்தால் இங்கு பெரிய சுனாமியே வரும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

IND vs NZ 2nd ODI: இதான் ஃபர்ஸ்ட் மேட்ச்: பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமா? பௌலிங்கிற்கு சாதகமா?

நேற்று முன் தினம் நடந்த இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. கிட்டத்தட்ட 7 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தை சுமூகமான முடிவு எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பேச்சுவார்த்தையின் போது, பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தான் தலைமை வகித்துள்ளார். இவரது தலைமையிலான குழுவில் டோலா பேனர்ஜி, அலக்னந்தா அசோக், யோகேஷ்வர் தத், சஹாதேவ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அப்பாவுக்கு தப்பாத புள்ள: விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் -யு14ல் கர்நாடகா அணிக்கு கேப்டனான ராகுல் டிராவிட் மகன்!

மேரி கோம் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை வரும் வரையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பொறுப்பிலிருந்து 4 வாரங்களுக்கு பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலகுவார் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய ஒலிம்பிக் தங்கம் வென்ற பஜ்ரங் புனியா கூறுகையில், நாங்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராஜ் தாக்கூர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியிருக்கிறார். இந்த குழு மூலமாக நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறோம். ஆகையால் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக கடந்த புதன்கிழமை முதல் நடந்து வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Gabba Test: வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்தியா: நினைவு கூர்ந்து டுவிட்டரில் வாழ்த்து!

click me!