சர்வதேச கிரிக்கெட் சம்மேளத்தின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணம் திருடப்பட்டுள்ளதாக ஐசிசி புகார் அளித்துள்ளது.
ஆன்லைன் மூலமாக ஐசிசியின் வங்கிக் கணக்கிலிருந்து 2.5 மில்லியன் (இந்திய மதிப்பில் 20 கோடிக்கும் அதிகம்) அமெரிக்க டாலர் மதிப்பிலான பணம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளதாக ஐசிசி புகார் அளித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த சம்பவம் குறித்து அமெரிக்காவில் உள்ள சட்ட அமலாக்க நிறுவனத்திடம் ஐசிசி புகார் அளித்துள்ளது. இந்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மோசடிக்கார்ர்கள் பணத்தை கொள்ளையடிக்க பயன்படுத்திய வணிக மின்னஞ்சல் சமரசம் (BEC), மின்னஞ்சல் கணக்கு சமரசம் (EAC) என்றும் அழைக்கப்படுகிறது. இது எஃப் பி ஐயின் (FBI - ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்) கூற்றுப்படி அதிகளவில் நிதி மோசடி நடக்கும் குற்றங்களில் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் குற்றங்களும் ஒன்று. இந்த மோசடி எப்படி நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. மோசடிக்காரர்கள் துபாயில் உள்ள ஐசிசி அலுவலக அதிகாரிகள் யாரேனும் தொடர்பு கொண்டு பணத்தை கொள்ளையடித்தார்களா? ஐசிசி விற்பனையாளர் அல்லது ஆலோசகர் மூலமாக பணத்தை கொள்ளையடித்தார்களா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
போலி மின்னஞ்சல், போலி பணப்பரிவர்த்தனை ஆகியவற்றின் மூலமாக ஐசிசியின் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி நடத்தப்பட்டுள்ளது. அதுவும் இந்த மோசடியானது ஒருமுறை, 2 முறை அல்ல தொடர்ந்து 4 முறை நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. இதுவரையில் ஐசிசி மொத்தமாக 2.5 மில்லியன் டாலர் பணத்தை இழந்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.20 கோடிக்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
SA20: முத்துசாமியின் சுழலில் சுருண்டது டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ்..! சொற்ப ரன்களுக்கு ஆல் அவுட்