டென்னிஸ் வரலாற்றில் 35 ஆண்டுகளுக்கு பிறகு தரவரிசை வீரர் ஒருவரை கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சுமித் நாகல் படைத்துள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பார்க்கில் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 2024 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடர் இதுவாகும். வரும் 18 ஆம் தேதி வரையில் இந்த தொடர் நடைபெறுகிறது. இதில், இந்தியா சார்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் பங்கேற்றார்.
இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஷிவம் துபேயின் சொத்து மதிப்பு ரூ.29 கோடியாம்!
இதில், தரவரிசையில் 31ஆவது இடத்திலுள்ள அலெக்ஸாண்டர் பப்லிக்கை முதல் சுற்றில் எதிர்கொண்டார். இந்த சுற்றில் சுமித் நாகல் 6-4, 6-2, 7-6 [7-5] என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். இதில், தரவரிசை ஏ சீடேடு வீரர் ஒருவரை 35 ஆண்டுகளுக்கு பிறகு தோற்கடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சுமித் நாகல் படைத்துள்ளார்.
நாகலின் இரண்டாவது சுற்று தகுதி இந்தியர்களுக்கு டென்னிஸ் வரலாற்றில் மறக்க முடியாத சாதனையாகும். ஆடவர் ஒற்றையர் பிரிவுகளுக்கு வரும்போது, ஆஸ்திரேலிய ஓபனில் எந்த இந்திய டென்னிஸ் வீரரும் எட்டாத தூரம் மூன்றாவது சுற்றாகும்.
இதற்கு முன்னதாக புகழ்பெற்ற ரமேஷ் கிருஷ்ணன் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் தனது வாழ்க்கையில் மொத்தம் 5 முறை 3ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் 1983, 1984, 1987, 1988 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் 3ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். கடைசியாக அவர் 1989 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 2ஆவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான மேட்ஸ் விலாண்டரை வீழ்த்தி 3ஆவது சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.
இந்த நிலையில் தான், அதன் பிறகு அதாவது 35 ஆண்டுகளுக்கு பிறகு சுமித் நாகல் 2ஆவது சுற்றில் தரவரிசையில் ஏ சீடேடு அந்தஸ்து பெற்ற ஒரு வீரரை வீழ்த்தி 3ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் முதல் சுற்றைத் தாண்டிய மற்றொரு இந்திய வீரர் விஜய் அமிர்தராஜ். அவர் 1984 ஆஸ்திரேலியன் ஓபனில் இரண்டாவது சுற்றில் நுழைந்தார், அதே நேரத்தில் லியாண்டர் பயஸ் 1997 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் 2ஆவது சுற்றுக்கு முன்னேறியிருந்தனர்.
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் எம்.எஸ்.தோனி கலந்து கொள்ள அழைப்பு!
இந்தியாவின் சமீபத்திய டென்னிஸ் வரலாற்றைப் பொறுத்தவரை, ஓய்வு பெற்ற சோம்தேவ் தேவ்வர்மன் 2013 ஆஸ்திரேலிய ஓபனில் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
The first Indian man in 3️⃣5️⃣ years to beat a seed at a Grand Slam 🇮🇳 • • • • • pic.twitter.com/SY55Ip4JaG
— #AusOpen (@AustralianOpen)