வங்க தேசத்தை வச்சு செய்த ஆஃப்கான் ஆல்ரவுண்டர்!! மீண்டும் ஒருமுறை மிரட்டிய ரஷீத் கான்

 
Published : Jun 07, 2018, 12:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
வங்க தேசத்தை வச்சு செய்த ஆஃப்கான் ஆல்ரவுண்டர்!! மீண்டும் ஒருமுறை மிரட்டிய ரஷீத் கான்

சுருக்கம்

afghanistan defeats bangladesh again in second t20

ரஷீத் கானின் அசத்தல் பவுலிங்கால் வங்க தேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.  

வங்க தேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடந்துவருகிறது. முதல் போட்டியில் வங்கதேச அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷீத் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையடுத்து நடந்து இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற வங்க தேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹாசன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் தமீம் இக்பாலை தவிர மற்றவர்கள் சோபிக்காததால், அந்த அணி 20 ஓவர் முடிவில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரஷீத் கானின் சுழலை சமாளிக்க முடியாமல் திணறிய வங்க தேச வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால், அந்த அணியால் 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

ஆஃப்கானிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரஷீத் கான், 4 ஓவர்களை வீசி 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

135 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி, 18.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியிலும் ரஷீத் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஒவ்வொரு போட்டியிலும் மிரட்டலாக பந்துவீசி தனது திறமையை மீண்டும் மீண்டும் நிரூபித்து, எதிரணிகளை கலங்கடித்து வருகிறார் ரஷீத் கான். 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!