காலில் 12 விரல்கள் கொண்ட “தங்க மங்கை” ஸ்வப்னா பர்மனுக்கு பிரத்யேக “கேன்வாஸ்ஷூ”: அடிடாஸ் நிறுவனம் தயாரிக்கிறது

By thenmozhi gFirst Published Sep 15, 2018, 1:13 PM IST
Highlights

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹெப்டத்லான் பிரிவில் முதல்முறையாக தங்கப்பதக்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு காலில் 12 விரல்கள் உள்ளன.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹெப்டத்லான் பிரிவில் முதல்முறையாக தங்கப்பதக்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு காலில் 12 விரல்கள் உள்ளன. முறையான கேன்வாஸ் ஷூ இல்லாமல் அவதிப்பட்ட பர்மனுக்கு அடிடாஸ் நிறுவனத்தில் இருந்து பிரத்யேக ஷூ தயாரிக்கப்பட உள்ளது

இதற்கான ஏற்பாடுகளை இந்திய விளையாட்டு ஆணையம் செய்துள்ளது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சமீபத்தில் நடந்த 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டியில் மகளிர் ஹெல்டத்லான் பிரிவில் நாட்டுக்காக முதல் முறையாக தங்கத்தை வென்று கொடுத்தார் ஸ்வப்னா பர்மான். இவருக்கு பிறந்ததில் இருந்து இரு கால்களிலும் தலா 6 விரல்களும் மொத்தம் 12 விரல்களுடன் பிறந்துள்ளார்.

இதனால், வழக்கமான வீராங்கனைகளுக்கான கேன்வாஸ்ஷூ அணிய முடியாமல் பர்மான் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். இதனால், வெறும் கால்களில் பயிற்சி செய்துள்ளார். சில நேரங்களில் வேதனையைத் தாங்கிக்கொண்டு வழக்கமான கேன்வாஸ்களை அணிந்து போட்டியில் பர்மான் பங்கேற்றார்.

இந்நிலையில், ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கம் வென்றதும் உருக்கமான தனது உடல்நிலையைக் கூறி யாரேனும் பிரத்யேமாக கேன்வாஸ்ஷூ செய்து கொடுங்கள் என்று பர்மான் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து ஐசிப் பர்மானுக்காக பிரத்யேக ஷூ தயாரித்துக்கொடுப்பதாக தெரிவித்திருந்தது.

ஆனால், ஸ்வப்னா பர்மானுக்காக இந்திய விளையாட்டு ஆணையம்(எஸ்ஏஐ) அடிடாஸ் நிறுவனத்திடம் கூறி பிரத்யேக ஷூ தயாரிக்கக் கேட்டுள்ளது. இது குறித்து இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குநர் நீலம் கபூர் கூறுகையில், ஆசிய விளையாட்டுப்போட்டியில் ஸவப்னா தங்கம் வென்ற பின் அவர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் , பர்மானுக்காக பிரத்யேக ஷூ தயாரிக்க ஆர்டர் கொடுக்க உத்தரவிட்டார்.

இது தொடர்பாக ஏற்கனவே ஸ்வப்னாவின் பயிற்சியாளர் சுபாஷ் சர்க்காரிடம் பேசி ஸ்வப்னா பர்மானுக்கு ஷூ எப்படி இருக்க  வேண்டும், அளவு என்ன, எந்தெந்தவசதிகள் தேவை என்பதை கேட்டிருக்கிறோம். எங்களின் மின்அஞ்சல் கிடைத்ததாக சர்காரும் தெரிவித்துள்ளார். ஸ்வப்னா காயத்தில் இருப்பதால், அவரைச் சந்திக்க முடியவில்லை. விரைவில் சந்தித்து அதற்குரிய விவரங்களை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். பர்மானுக்கு தேவையான கேன்வாஸ்ஷூக்களை அடிடாஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது எனத் தெரிவித்தார்.

இது குறித்து ஸ்வப்னா பர்மானின் பயிற்சியாளர் சர்க்கார் கூறுகையில், நான் இதற்குமுன் பலமுறை இந்திய விளையாட்டு ஆணையத்திடம் ஸ்வப்னாவின் கேன்வாஸ்ஷூ விவரங்கள் குறித்து தெரிவித்திருந்தேன். ஆனால் அப்போதெல்லாம் அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஸ்வப்னா ஆசியக் கோப்பையில் தங்கம் வென்றபின்தான் இந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள். ஒவ்வொரு நிறுவனமும் பர்மானுக்காக உதவமுன் வருகிறார்கள் எனத் தெரிவித்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சிப்பட்டறையில்தான் ஸ்வப்னா பர்மான் அடையாளம் காணப்பட்டு ஆசியப் போட்டிக்காக பயிற்சி அளிக்கப்பட்டார். மேலும் ஒலிம்பி பதக்கம் வெல்லும் வீரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு பர்மான் சேர்க்கப்பட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

click me!